கோட் படத்தின் கதை இதுதான்.. வெங்கட் பிரபுவின் இந்த பட ஸ்டோரியா? தளபதி விஜய்க்கு கை கொடுக்குமா?
இயக்குனர் வெங்கட் பிரபு ஏற்கனவே இயக்கியிருந்த படத்தின் கதைதான் தற்போது தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தின் கதையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Thalapathy Vijay GOAT Story
தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான, 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்று அழைக்கப்படும் கோட் (GOAT) செப்டம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Thalapathy Vijay
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'கோட்' திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.
Venkat Prabhu
மேலும், இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சயின்ஸ் பிக்சன் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
The Greatest of All Time
கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, அஜ்மல் அமீர், வைபவ், லைலா, மோகன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தளபதி விஜயின் கோட் படம் சில வருடங்களுக்கு முன்பு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலாஜி படம் வெளியாகி இருந்தது.
GOAT Movie
அதில் லோகம் என்ற குறும்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் அதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். லோகம் தான் கோட் படத்தின் கதையாக இருக்குமோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?