வேலுனா.. மாஸ் தான்னா நீ.. ஃபஹத் வாங்கிய அடுத்த சொகுசு கார் - ஏற்கனவே வீட்டில் எத்தனை கார் நிக்குது தெரியுமா?
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரபல நடிகர் ஃபஹத் பாசில் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர துவங்கியுள்ளார். ஃபஹத் பாசில் நடிப்பில் காட்டும் அதே ஈடுபாட்டை தான் வாங்கும் கார்கள் மீதும் காட்டுகின்றார் என்றால் அது மிகையல்ல.
Nazriya Nazim and Fahadh Fassil
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என்று பல இந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்த இயக்குனர் பாசில் அவர்களின் மகன் தான் ஃபஹத் பாசில். மலையாள மொழியில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள அவர், கடந்த 2014ம் ஆண்டு பிரபல நடிகர் நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டார்.
Land Rover Defender car
தமிழில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான ஃபஹத், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் படங்களுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக மாறியுள்ளார் என்று தான் கூறவேண்டும். நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் ஃபஹத் பாசில் தற்போது புதிய சொகுசு காரை ஒன்றை வாங்கியுள்ளார். மனைவி நஸ்ரியாவுடன் அண்மையில் தனது 9வது வருட திருமணநாளை கொண்டாடிய நிலையில் அவர் இந்த காரை வாங்கியதாக கூறப்படுகிறது.
Fahadh Fassil Porsche 911 Carrera S Car
லேண்ட் ரோவர் நிறுவனத்தில் டிபெண்டெர் மாடல் காரைத் தான் தற்போது ஃபஹத் வாங்கியுள்ளாராம். கேரளாவில் இதன் ஆன் ரோடு விலை சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் ஆர்வம் கொண்ட ஃபஹத், அதற்கு இணையாக கார்களை வாங்குவதிலும் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே அவரிடம் ஒரு Porsche 911 Carrera S கார் உள்ளது, இந்த காரின் டாப் மாடல் விலை சுமார் 2.9 கோடியாகும்.
Fahadh Fassil Range Rover Vogue Car
அதே போல அவர் ஏற்கனவே Range Rover நிறுவனத்தின் Vogue மாடல் கார் ஒன்றையும் Mercedes Benz நிறுவனத்தின் E Class கார் ஒன்றை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவற்றின் விலை முறையே 3.4 கோடி மற்றும் 80 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அவரிடம் இன்னும் சில சொகுசு கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.