- Home
- Gallery
- அயோத்தி ராமருக்கு ஹனுமானின் அன்பு பரிசு... கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கிய ஹனுமான் படக்குழு
அயோத்தி ராமருக்கு ஹனுமானின் அன்பு பரிசு... கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கிய ஹனுமான் படக்குழு
பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஹனுமான் என்கிற பான் இந்தியா படத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ஏராளாமன சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர். இந்த பிரம்மாண்ட விழா பிரதமர் மோடி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்குவதாக ஹனுமான் படக்குழு அதன் ரிலீசுக்கு முன்பே அறிவித்திருந்தனர். குறிப்பாக ஹனுமான் படத்துக்காக விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர். தற்போது படமும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... ஹனுமன் பட டிக்கெட்டுகள் ஒவ்வொன்றில் இருந்தும் ராமர் கோவிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்குவோம் - படக்குழு அறிவிப்பு
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கி இருந்தார். இதில் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடித்திருந்தார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு பான் இந்தியா அளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ரிலீஸ் ஆன பத்தே நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு சொன்னபடியே நன்கொடையை வழங்கி இருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 53 லட்சத்து 28 ஆயிரத்து 211 டிக்கெட் விற்பனை ஆனதாகவும், அதில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.5 வீதம் மொத்தமாக ரூ.2 கோடியே 66 லட்சத்து 41 ஆயிரத்து 55 ரூபாய் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... காலு மேல கால போடு இராவண குலமே... அரசியல் பேசி அதிரவிட்ட கீர்த்தி பாண்டியன் - மெர்சலான பா.இரஞ்சித்