- Home
- Gallery
- ஹனுமன் பட டிக்கெட்டுகள் ஒவ்வொன்றில் இருந்தும் ராமர் கோவிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்குவோம் - படக்குழு அறிவிப்பு
ஹனுமன் பட டிக்கெட்டுகள் ஒவ்வொன்றில் இருந்தும் ராமர் கோவிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்குவோம் - படக்குழு அறிவிப்பு
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு ஹனுமன் படத்திற்காக விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 நன்கொடையாக வழங்கப்பட உள்ளதாம்.

HanuMan movie Team
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்தக் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் உள்ள சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
Ayodhya Ram Mandir
அயோத்தி ராமர் கோவிலுக்காக ஹனுமன் படக்குழுவினர் நன்கொடை வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்காக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 ராமர் கோவில் நன்கொடைக்காக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... 70 கேமரா முன்னாடி வச்சு செய்யப்போறேன்... நிக்சனை விரட்டியடிக்கும் முடிவோடு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வினுஷா
Hanuman Movie Team Donation
ஹனுமன் படக்குழுவின் இந்த தாராள மனசுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. ஹனுமன் திரைப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்துள்ளார். மேலும் அம்ரிதா ஐய்யர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Chiranjeevi at HanuMan Pre Release Event
ஹனுமன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார். இந்த விழாவில் ஹனுமன் படக்குழுவினர் அனைவரும் காலணி அணியாமல் கலந்துகொண்டனர். ஹனுமனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் இவ்வாறு கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படியுங்கள்... லியோ முதல் ஜவான் வரை... பொங்கல் ஸ்பெஷலாக போட்டிபோட்டு புதுப்படங்களை இறக்கும் டிவி சேனல்கள் - முழு லிஸ்ட் இதோ