என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர்... எம்.ஜி.ஆர் பற்றி ஜெயலலிதா அளித்த பிளாஷ்பேக் பேட்டி
மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் குறித்து மனம் திறந்து பேசிய பேட்டி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
MGR, Jayalalitha
தமிழ் நாட்டில் சினிமா மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பட்டியலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இருவருமே தமிழ்நாட்டு முதல்வராக பதவி வகித்து மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மறைந்தாலும் அவர்களின் புகழ் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. எம்.ஜி.ஆர் பற்றி ஜெயலலிதா மனம்திறந்து பேசியது ஒருசில இடங்களில் தான். அப்படி அவர் அளித்த பிளாஷ்பேக் பேட்டியை தான் தற்போது பார்க்க உள்ளோம்.
Jayalalitha says about MGR
ஜெயலலிதா தன்னுடைய தோழியும் நடிகையுமான சிமி க்ரேவலுக்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் குறித்த கேள்விகளுக்கு ஓப்பனாக பதில் அளித்து உள்ளார். அதன்படி எம்ஜிஆரை காதலித்தீர்களா என்கிற கேள்விக்கு அகன்ற புன்னகையோடு, அவர் கவர்ந்திழுக்கும் ஆளுமை, அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் எனக் கூறி அவர் மீது தனக்கு இருந்த கிரஷ்-ஷையும் லேசாக வெளிப்படுத்தி இருந்தார் ஜெ.
இதையும் படியுங்கள்... டன் கணக்கில் வெள்ளி.. 28 கிலோ தங்கம்.. புடவை மட்டும் 10000க்கும் மேல - இந்தியாவின் ரிச் நடிகையாக வாழ்ந்த ஜெ
Jayalalitha
அடுத்ததாக ஒரு தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் என்கிற கேள்விக்கு, மிகுந்த அக்கறை உள்ள மனிதர் என்று பதிலளித்த ஜெயலலிதா, அம்மாவுக்கு பின் என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் எம்.ஜி.ஆர் தான் என ஓப்பனாகவே கூறி இருந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினாரா என்கிற வில்லங்கமான கேள்வியை சிமி க்ரேவல் கேட்க, அதற்கு ஆமாம் என ஓப்பனாகவே பதிலளித்தார் ஜெ.
Jayalalitha Love Towards MGR
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, என் அம்மா, எம்.ஜி.ஆர் இருவருமே பிடிவாதமான ஆளுமைகள், என் தாய் என் மீதும், எம்.ஜி.ஆர் என்னுடைய வாழ்க்கை மீதும் ஆதிக்கம் செலுத்தினார். அவர்கள் இருவருமே என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள் என ஜெ தெரிவிக்க, உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா என்கிற கேள்வியை பட்டென கேட்டுவிட்டார் சிமி, உடனே அகன்ற புன்னகையோடு, இருந்திருக்கலாம் என பதிலளித்தார் ஜெயலலிதா.
இதையும் படியுங்கள்... ரூ.20 லட்சம் வாடகை பாக்கி... நைசாக வீட்டை காலி பண்ணிவிட்டு எஸ்கேப் ஆன யுவன் - போலீசுக்கு பறந்த புகார்