செட்டாகாதுனு தெரிஞ்சும் வில்லியாக நடித்த கோலிவுட் குயின்ஸ் - அதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல!
தமிழ் திரைப்படங்களில் உச்ச நடிகைகளாக வளம் வரும் ஒரு சில சூப்பர் ஹிட் நாயகிகள், தங்களுடைய இயல்பான கதாபாத்திரத்தில் இருந்து மாறி வில்லியாக நடித்து வெளியான திரைப்படங்கள் பல உண்டு தமிழ் திரை உலகில், அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Jyothika
பொதுவாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் பலர் பிற்காலத்தில் ஹீரோவாக மாறியது உண்டு. அதற்கு ஏற்றார் போல் தங்கள் உடல் மொழியை மாற்றிக் கொள்ளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். அது போலவே பல நாயகிகள் சூப்பர் ஹிட் நடிகைகளாக வளம் வந்த பொழுது, சில நெகட்டிவ் கதாபாத்திரங்களும் ஏற்று நடித்து அதில் வெற்றி கண்டுள்ளனர்.
ஆனால் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு செட் ஆகாது என்று தெரிந்தும், வில்லியாக நடித்து, பின் அந்த நெகட்டிவ் ரோல் பக்கமே செல்லாமல், அதற்கு ஒரு கும்பிடுபோட்டதும் உண்டு. அந்த வகையில் பிரபல நடிகை ஜோதிகா அவர்கள், "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். சாக்லேட் ஹீரோயினாக பார்த்து பழகிய ஜோதிகாவை, வில்லியாக யாரும் ஏற்காத நிலையில் அவர் அதன் பிறகு வில்லியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
பிரபல திரைப்பட இயக்குனர் ஹரியின் தந்தை உடல் நலக்குறைவால் மறைவு.. பிரபலங்கள் அஞ்சலி..
Samantha
அதேபோல பிரபல நடிகை சமந்தா அவர்கள் விக்ரம் அவர்களின் "10 எண்றதுக்குள்ள" திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் வில்லியாக ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்த சமந்தா, அந்த படத்திற்காகவே சிகரடெல்லாம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கும் வில்லி கதாபாத்திரம் செட்டாக நிலையில், அத்தோடு தனது வில்லி கதாபாத்திர வாழ்க்கைக்கு முடிவு கட்டினார் அவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Simran
நடிகை சிம்ரன் 90களின் இறுதியில் இருந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நாயகியாக வலம் வரும் நாயகியான இவர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் நடிப்பில் வெளியான "சீமராஜா" திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். ஆனால் அவரை மிகவும் மென்மையான கதாபாத்திரங்களில் பார்த்து பார்த்து பழகி ரசிகர்களுக்கு அவர் வில்லியாக நடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.