- Home
- Gallery
- எழிலிடம் ஏமார்ந்து பல்பு வாங்கிய மனோகரி! பொஸசிவில் இந்து... மகிழ்ச்சியில் சுடர்! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
எழிலிடம் ஏமார்ந்து பல்பு வாங்கிய மனோகரி! பொஸசிவில் இந்து... மகிழ்ச்சியில் சுடர்! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

ninaithen Vandhai Serial
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் குழந்தைகளிடம் ஹாஸ்டலுக்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்ல அப்போ சுடரையும் வெளியே அனுப்ப மாட்டீங்களா என்று கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ninaithen Vandhai Serial
அதாவது எழில் சுடரையும் வெளியே அனுப்ப மாட்டேன் உங்க கூடத்தான் இருப்பார் என்று சொல்ல குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர். குழந்தைகள் இல்லை பெஸ்ட் டாடி என்று தைரியம் எழுதி இருக்க இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று எழில் சுடருக்கு நன்றி சொல்கிறான்.
ninaithen Vandhai Serial
உனக்கு என்ன வேணும் கேளு என்று கேட்க சுடர் புடவை வேண்டும் என்று சொல்கிறாள். அதன் பிறகு குழந்தைகள் எல்லோரும் சுடர் உடன் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி சந்தோஷப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து எழில் மற்றும் மனோகரி ஹாஸ்பிடலில் இருக்கும்போது மனோகரியிடம் ரொம்ப முக்கியமான ஒருவருக்கு புடவை எடுக்கணும் ஒரு நல்ல கடையை கூட்டிட்டு போ என்று சொல்கிறான். மனோகரி எழில் தனக்குத்தான் புடவை எடுக்கப் போவதாக நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கடைக்கு குட்டி செல்கிறாள்.
மேலும் நானே செலக்ட் பண்ணி தரேன் என்று மனோகரி ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து எழிலுக்கும் தனக்கும் பிடித்தபடி ஒரு புடவையை தேர்வு செய்கிறாள். பிறகு இருவரும் வீட்டுக்கு வர எழில் மனோகரிடம் இருக்கும் புடவையை வாங்கி சுடரிடம் கொடுக்க அதைப் பார்த்து மனோகரி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். அதே நேரத்தில் இந்து இதை பார்த்து பொசசிவ் ஆகிறாள்.
ninaithen vandhai serial
சுடர் புடவை சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி சார் என்றும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.