- Home
- Gallery
- சூப்பர் ஸ்டார் நடித்த 'தளபதி' படத்தில் அரவிந்த் சாமி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் நடித்த 'தளபதி' படத்தில் அரவிந்த் சாமி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, தளபதி படத்தில்... அரவிந்த் சாமி ஏற்று நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த சூப்பர் ஸ்டார் நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தளபதி'. இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நண்பர்களாக நடித்திருந்த நிலையில், அரவிந்த் சுவாமி ரஜினிகாந்தின் தம்பியாக நடித்திருப்பார். மேலும் ஜெய்சங்கர், அம்ரிஷ் பூரி, ஸ்ரீவித்யா, பானுப்ரியா, ஷோபனா மற்றும் கீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நட்பை உயிராக மதிக்கும் சூர்யா (ரஜினிகாந்த்) ஒரு சக்திவாய்ந்த டான் தேவராஜுடன் (மம்மூட்டியுடன்) நட்பு கொள்கிறார். இவர்களை தடுக்க ஒரு மாவட்ட ஆட்சியராக அர்ஜுன் (அரவிந்தசாமி) வருகிறார். இறுதியில் அரவிந்த் சாமி வென்றாரா? நட்பு ஜெயித்ததா... என காதல், தாய் பாசம் என எமோஷன் கலந்த கதையம்சத்துடன் இப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை பதிவு செய்தார் மணிரத்னம்.
தளபதி படத்தின் கதைக்களம், மகாபாரதத்தின் கதாபாத்திரங்களான கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் இடையிலான நட்பை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற அணைத்து பாடல்களுக்கேமே தற்போது வரை அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாடல்களை கவிஞர் வாலி எழுதி இருந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக சுரேஷ் அர்சும் பணியாற்றினார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் எடுக்காதது. ₹ 3 கோடி பட்ஜெட்டில், எடுக்கப்பட்ட இப்படம் பல கோடி லாபத்தை பெற்று தந்தது.
தம்பியின் ஃபேஸ் புக் காதலுக்கு கடும் எதிர்ப்பு? முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்த யோகி பாபு!
இந்த படம் குறித்த தகவல் ஒன்று 33 வருடத்திற்கு பின்னர் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில்... அதாவது தளபதி படத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பிரபல டோலிவுட் திரையுலகின் டாப் ஹீரோவான நாகர்ஜுனா தானாம்.
கதை பிடித்திருந்த போதும் அந்த சமயத்தில் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்ததால், இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னரே அரவிந்த் சாமியை இப்படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்தார் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
கதை பிடித்திருந்த போதும் அந்த சமயத்தில் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்ததால், இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னரே அரவிந்த் சாமியை இப்படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்தார் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.