- Home
- Gallery
- ஒரே ஒரு இமெயில்... சட்டு புட்டுன்னு எதிர்நீச்சல் தொடரை முடிவுக்கு கொண்டு வந்த திருச்செல்வம்! பின்னணி என்ன?
ஒரே ஒரு இமெயில்... சட்டு புட்டுன்னு எதிர்நீச்சல் தொடரை முடிவுக்கு கொண்டு வந்த திருச்செல்வம்! பின்னணி என்ன?
சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' தொடரை திடீரென முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.

ethirneechal
'கோலங்கள்' சீரியலை இயக்கி பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வந்த தொடர் 'எதிர்நீச்சல்'. பெண்கள் மீது ஆணாதிக்கத்தை செலுத்திய ஒரு மனிதரின் உண்மையான வாழ்க்கையை தழுவி புனையப்பட்ட கதைகளத்துடன் இந்த சீரியல் எடுக்கப்பட்டது.
ethirneechal
இந்த தொடரில் குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சீரியலில் மாரிமுத்து நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடைய எதார்த்தமான நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களையும், ரசிகர்கள் நேசிப்பார்கள் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணமாகவே பார்க்கப்பட்டது.
ethirneechal
மேலும் எதிர் நீச்சல் சீரியல் இவரது திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கியது மட்டும் இன்றி... அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்த நிலையில், தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
சன் டிவியில் பரபரப்பான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், நாளையுடன் இந்த சீரியல் முடிவடைய உள்ளது பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரமாக முடிவடைய என்ன காரணம் என பல ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதன் பின்னணி காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தம்பியின் ஃபேஸ் புக் காதலுக்கு கடும் எதிர்ப்பு? முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்த யோகி பாபு!
Ethirneechal
டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 5 இடத்தை இந்த சீரியல் பிடித்து வந்தாலும், ஒரு சில மாற்றங்களை சீரியலில் கொண்டு வர வேண்டும் என சேனல் நிர்வாகம் இயக்குனர் திருச்செல்வனுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியதாகவும், ஆனால் அதில் குறிப்பிட்டு இருந்த மாற்றங்களை செய்ய முடியாது என கூறி அதிரடியாக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர இயக்குனர் முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. எப்போதும் போல் சீரியல் ஷூட்டிங்க்கு வந்த பிரபலங்களுக்கு கிளைமேக்ஸ் காட்சியை இயக்குனர் படமாக்க போகிறார் என்பதே கடைசி நேரத்தில் தான் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.