கிடு கிடுவென உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்.! 24 மணி நேரத்தில் இத்தனை அடி உயர்வா.? நீர் வரத்து என்ன தெரியுமா
விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது 80அடியை எட்டியுள்ள நீர் மட்டம் வருகிற நாட்களில் இதே போல நீர் வரத்து இருந்தால் விரைவில் 100 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
mettur
விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி ஆறு
தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது காவிரி ஆகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, மைசூர், பெங்களூரு, ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டிற்குள் வருகிறது.
தருமபுரி சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இந்த மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன்பெறும்.
வறண்ட மேட்டூர் அணை
இதற்காக தமிழக அரசு சார்பாக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முற்றிலுமாக வறண்டு காட்சி அளித்தது. கார்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரும் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்திருந்தது.
mettur dam level will high
கன மழை- தண்ணீர் திறந்த கர்நாடகா
இந்த சூழ்நிலையில் தான் கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுத்த நிலையில் இயற்கையாகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய சூழ்நிலையை கர்நாடகவிற்கு ஏற்படுத்தியது. கர்நாடகவில் பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதனையடுத்து தமிழகத்திற்கு 75ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
KRS DAM WATER LEVEL
கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் என்ன.?
தற்போது கர்நாடக அணைகளில் நீர் இருப்பு பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கபினி அணையில் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆக உள்ளது. மழை சற்று குறைந்துள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் அளவானது குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்கேனக்கல் நீர் வரத்து என்ன.?
இதனிடையே தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 77000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70000 கனடியாக குறைந்துள்ளது.
சுமார் 7ஆயிரம் கன அடி குறைந்துள்ளது. இருந்த போதும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இன்று மாலைக்குள் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிடு, கிடுவென அதிகரித்த நீர்மட்டம்
அதே நேரத்தில் விவசாயிகள் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 40 அடிக்கும் குறைவாக இருந்த நீர் மட்டும் இரண்டு மடங்காக அதிகரித்து தற்போது 82 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 78,238 கன அடியிலிருந்து 79,682 கன அடியாக அதிகரித்துள்ளது.
Vegetables Price : தக்காளி விலை கூடியதா ? குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
Kabini Dam
மேட்டூர் அணை 100 அடியை தொடுமா.?
தற்போதைய நீர்மட்டம் 82.00 அடியாகவும், நீர் இருப்பு 43.97 டி.எம்.சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரே நாளில் 7அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்தது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.