- Home
- Gallery
- Vegetables Price : தக்காளி விலை கூடியதா ? குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
Vegetables Price : தக்காளி விலை கூடியதா ? குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
கன மழையால் காய்கறிகளின் உற்பத்தி பெரிய அளிவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி, கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது உச்சத்திலையே நீடிக்கிறது.

Vegetables Price Koyembedu
உச்சத்தில் தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 55 முதல் 65 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
நெல்லிக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 30 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை நிலவரம்
இஞ்சி ஒரு கிலோ 170-க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது