நாளை கடைசி நாள்.!விண்ணப்பித்துவிட்டீர்களா.? மத்திய அரசில் 17ஆயிரம் பேருக்கு வேலை.. கை நிறைய சம்பளம்-இதோ லிங்க்
மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி 17ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நாளையோடு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்
மத்திய அரசில் வேலை வாய்ப்பு
இளைஞர்களின் கனவாக அரசு வேலையானது உள்ளது, கை நிறைய சம்பளம், சமூகத்தில் கவுரமான வேலை,அரசு விடுமுறை என பல சலுகைகளோடு பாதுகாப்பும் இருக்கும். எனவே அரசு பணிகளில் சேர மத்திய மற்றும் மாநில அரசுகள் தேர்வு மூலம் ஆட்களை தேர்ந்தொடுக்கும், தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் போல் மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு மூலம் அரசு பணிக்கை ஆட்களை தேர்வு செய்து வருகிறது.
17ஆயிரம் காலிப்பணியிடம்
அந்த வகையில், 17ஆயிரத்து 727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் நாளையோடு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மத்திய அரசு துறைகளில் குரூப் பி மற்றும் சி பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்பாகும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அப்ளை பண்ணுங்க? வெற்றி பெற்றால் கைநிறைய சம்பளம், தனி கார்! வெற லெவல் லைஃப்!!
தகுதி என்ன.?
18 - 27 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஓபிசி மற்றும் எஸ்சி? எஸ்டி பிரிவினருக்கு வயதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன.?
மாத சம்பளத்தை பொறுத்து வரை பதவி மற்றும் பணியிடங்களை ஏற்ப மாறுபடும். அந்த வகையில், ரூ.44,900 - 1,42,400, ரூ. 35,400 - 1,12,400, ரூ29,200 - 92,300 மற்றும் ரூ.25,500 - 81,100 என வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 24ஆம் தேதி (நாளை) கடைசி நாளாகும். இந்த பணியிடங்கள் மற்றும் விண்ணப்பங்கள் தேர்வு தொடர்பாக அறிந்து கொள்ள இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. https://ssc.gov.in/login இங்கே கிளிக் செய்யவும்.