கட்சி ஆரம்பிக்கிறவங்க எல்லாம் எம்ஜிஆராக முடியாது! 2 அமாவாசை தாங்காது! விஜயை மறைமுகமாக தாக்கிய RS.பாரதி!
நாகையில் நடைபெற்ற திமுக விழாவில் 2000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என தெரிவித்தார்.
DMK
நாகையில் உள்ள தனியார் திருமண அரங்கில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் தலைமையில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
RS Bharathi
அப்போது நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்:- எம்.ஜிஆர் உயிரோடு இருந்தவரை மீனவர்களின் மனநிலை வேறு, தற்போது மீனவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். மீனவர்களும், மீனவ இளைஞர்களும், மாணவர்களும் திமுக மீது நம்பிக்கையுடன், ஆதரவுடனும் உள்ளனர்.
இதையும் படிங்க: தளபதியின் த.வெ.க.. விரைவில் இணையும் நடிகை ரோஜா? தீயாய் பரவும் தகவல் உண்மையா?
Thalapathy Vijay
நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் தளபதி விஜயோடு இணைந்து அரசியல் களத்தில் செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர அரசியலில் கடந்த 20 ஆண்டுகாலமாக பயணித்து வருபவரும், முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா இப்போது தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் விரைவில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.