MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தன்னிடம் வேலை பார்த்தவருக்கே தன் பொண்ணை கொடுத்த ஷங்கர்... அடுத்த அட்லீயா? யார் இந்த தருண் கார்த்திக்?

தன்னிடம் வேலை பார்த்தவருக்கே தன் பொண்ணை கொடுத்த ஷங்கர்... அடுத்த அட்லீயா? யார் இந்த தருண் கார்த்திக்?

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் கார்த்திக் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில், அவர் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2024, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
aishwarya shankar

aishwarya shankar

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு அதிதி, ஐஸ்வர்யா என்கிற மகள்களும் அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மகள்கள் இருவருமே டாக்டருக்கு படித்துள்ளனர். அவரின் மகன் அர்ஜித் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்துள்ளார். இதில் ஷங்கரின் இளைய மகள் அதிதி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த விருமன், மாவீரன் போன்ற இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

24
Aditi, Aishwarya

Aditi, Aishwarya

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் அவர் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் ரோஹித் என்கிற கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வாழ்க்கை ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதற்கு காரணம் ரோஹித், பாலியல் வழக்கில் சிக்கியதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் ரோஹித்தை பிரிந்துவிட்டார் ஐஸ்வர்யா.

இதையும் படியுங்கள்... "என் உலகமே இவங்க இரண்டு பேர் தான்".. சகோதிரியின் திருமணம்.. மெழுகு சிலை போல தயாரான அதிதி - வைரல் பிக்ஸ்!

34
Shankar daughters

Shankar daughters

பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த ஐஸ்வர்யா, தற்போது தருண் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த தருண் கார்த்திக் வேறு யாருமில்லை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவராம். தன்னிடம் வேலை பார்க்கும் போது தருணின் திறமையை பார்த்து வியந்துபோன ஷங்கர், அவருக்கு தன் பொண்ணை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

44
Aishwarya Shankar, Tarun Karthik

Aishwarya Shankar, Tarun Karthik

அதுமட்டுமின்றி தருண் கார்த்திக் பாடகர், பாடலாசிரியர், எடிட்டர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். இவர் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லீ தற்போது கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நிலையில், அவரின் பட்டறையில் இருந்து வரும் தருண் கார்த்திக்கும் அட்லீயை போல் அடுத்தடுத்து வெற்றிகளை ருசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... பாலியல் வழக்கில் சிக்கிய முதல் கணவன்... விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான ஷங்கர் மகள் - மாப்ள இவரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved