ஆறு ஆண்டுகள் கழித்து களமிறங்கும் இயக்குனர் சேரன்.. கைகோர்க்கும் கன்னட சூப்பர் ஸ்டார் - KGF நாயகி Onboard!
Director Cheran : மதுரை மாநகரம் தமிழ் சினிமாவிற்கு அளித்த பல நல்ல கலைஞர்களில் ஒருவர் தான் சேரன். பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்து, பிறகு இயக்குனராக உயர்ந்தவர் இவர் என்றால் அது மிகையல்ல.
Director Cheran
பிரபல இயக்குனருக்கு கே.எஸ். ரவிக்குமாரின் "புரியாத புதிர்", "சேரன் பாண்டியன்", "சூரியன் சந்திரன்" உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து. அதன் பிறகு கடந்த 1997ம் ஆண்டு வெளியான "பாரதி கண்ணம்மா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் சேரன்.
"வெற்றி கொடி கட்டு", "ஆட்டோகிராப்", "தவமாய் தவமிருந்து", "ஆடும் கூத்து" உள்ளிட்ட நான்கு தமிழ் திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்ற ஒரு மிகச்சிறந்த இயக்குனரும், நடிகரும் தான் சேரன் என்பது பலரும் அறியாத உண்மை.
Kiccha Sudeep 47
இவர் இயக்கி நடித்த பல திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி வந்தாலும், குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஒதுங்கி இருந்தார் சேரன். இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "திருமணம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய நடித்திருந்தார். தமிழில் இவர் இறுதியாக நடித்து வெளியான திரைப்படம் "தமிழ் குடிமகன்" என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள சேரன், கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவர்களை வைத்து ஒரு திரைப்படத்தை தற்பொழுது இயக்க உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Srinidhi Shetty
இந்தத் திரைப்படம் கிச்சா சுதீப் அவர்களுடைய 47வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகையும், கேஜிஎப் திரைப்பட நாயகியுமான ஸ்ரீநிதி செட்டி நடிக்க உள்ளார் என்கின்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.