- Home
- Gallery
- 50வது படத்தில் அடுத்தடுத்து மாஸ் காட்டிய தனுஷ், விஜய் சேதுபதி! கோட்டைவிட்ட கில்லி நடிகர்!
50வது படத்தில் அடுத்தடுத்து மாஸ் காட்டிய தனுஷ், விஜய் சேதுபதி! கோட்டைவிட்ட கில்லி நடிகர்!
அண்மையில் வெளியான விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா சக்கை போடுபோட்டது. தற்போது வெளியாகியிருக்கும் தனுஷின் 50வது படமான ராயன் வெற்றி நடை போட்டு வருகிறது. யார் யாருக்கு 50வது படம் கைகொடுத்தது என பார்க்காலம்.

விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வசூல்வேட்டை நடத்தியது. 100கோடி வரை வசூலித்த மகாராஜா திரைப்படம் தற்போது OTT-யில் வெளியாகியுள்ளது.
Rayan First Look
தனுஷ்
அண்மையில் வெளியான தனுஷின் 50-வது படமான 'ராயன்' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் ரூ. 24 கோடி வசூலித்துள்ளது. இவ்வார இறுதியில் இப்படம் 60 முதல் 70 கோடி வசூலாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.
அஜித்
வெங்கட் பிரபு இயக்கிய தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படமும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
விஜய்
தளபதி விஜய்யின் 50- வது படம் 'சுறா' திரை வரலாற்றில் படுதோல்வியை சந்தித்தது. 2010-ம் ஆண்டு வெளியான விஜய்யின் சுறா படம் மோசமான படங்களில் ஒன்றாக உள்ளது.
இதையும் படியுங்கள்... தளபதி விஜய் என்னை அழைத்தால் அவரின் TVK கட்சியில் இணைய தயார்! இயக்குனர் அமீர் அதிரடி பேட்டி!
விக்ரம்
விக்ரமின் 50வது படம் "ஐ"! பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இப்படம் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன்
உலகநாயகம் கமல்ஹாசனின் 50வது படம் மூன்று முடிச்சு. இப்படத்தை இயக்குனர் கே பாலசந்தர் இயக்கியிருந்தார். இதில், கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியும் வில்லனாக ரஜினிகாந்த்தும் நடித்திருந்தனர்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50வது படம் டைகர்! இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் என் டி ஆர் இணைந்து ரஜினி நடித்திருந்தார்.
இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரக்கடித்துக்கொண்டு... கையில் சைடிஷுடன் மது பிரியர்களுடன் அட்வைஸ் கூறிய ஓவியா!