சந்திரலேகா சீரியல் நடிகைக்கு ட்வின்ஸ்.. ஸ்வீட்டாக வெளியிட்ட உருக்கமான மெசேஜ் - குவியும் ரசிகர்களின் வாழ்த்து!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி அண்மையில் முடிவடைந்த சந்திரலேகா நாடகத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகை ஸ்வேதாவுக்கு தற்பொழுது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.
Actress Shwetha Photos
ஸ்வேதா பந்தேகர், இவருடைய உண்மையான இந்த பெயரை சொன்னால் யாருக்கும் அவ்வளவு எளிதில் தெரியாது. ஆனால் சந்திரலேகா சீரியலில் நடித்த சந்திரா மற்றும் நிலா என்று கூறினால் ரசிகர்கள் எளிதில் தெரிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு அந்த சீரியலில் மூலம் புகழ்பெற்றார் என்றால் அது மிகையல்ல.
Shwetha Marriage
ஆனால் சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாகவே கடந்த 2007 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்து திரை உலகில் களம் இறங்கினார் ஸ்வேதா. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வந்த அவர், இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Shwetha Photos
திரைப்படங்களில் நடித்து வந்த அதே நேரத்தில் இவர் சின்னத்திரை நாடகங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான மகள் மற்றும் சந்திரலேகா ஆகிய இரு நாடகங்களில் இவர் நடித்திருந்தார். குறிப்பாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிய சந்திரலேகா நாடகத்தில் இரட்டை வேடத்தில் இவர் கதையின் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Shwetha
இறுதியில் சென்ற ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். மால் மற்றும் ஸ்வப்னா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரட்டைகளில் ஒருவர் ஆண் குழந்தை மற்றொரு பெண் குழந்தை. ஆனால் இவர்கள் இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள அவர் கடவுள் தந்த இந்த வாரத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்றும், எனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி என்றும் தனது பதிவில் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.