விவாகரத்துக்கு பின்... இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் பிக்பாஸ் அபிஷேக் ராஜா - பொண்ணு யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன பிக்பாஸ் அபிஷேக் ராஜா, தன்னுடைய காதலியை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
Bigg Boss abishek Raja
யூடியூப்பில் விமர்சகராக இருந்து பேமஸ் ஆனவர் அபிஷேக் ராஜா. பல்வேறு சினிமா பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ள இவர், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் கண்டெட் கொடுக்கும் ஆர்வத்தில் கிரிஞ்சாக பல விஷயங்களை செய்த அபிஷேக் ராஜா பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார். பின்னர் வைல்டு கார்டாக வந்தும் பெரிதும் சோபிக்கவில்லை.
Abishek Raja weds Swati
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ஜிவி பிரகாஷை வைத்து ஆல்பம் பாடலை இயக்கிய அவர், அடுத்ததாக ஜாம் ஜாம் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே தீபா என்பவருடன் திருமணம் ஆகி, அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதுபற்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... வாயை விட்டு சிக்கிய ரோகிணி..! க்ரிஷுக்கு தெரியவந்த உண்மை... மீனா - முத்துவிடம் இதை சொல்வாரா?
Abishek Raja 2nd Marriage
அபிஷேக் ராஜா தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக அவரது முதல் மனைவி தீபா அந்த சமயத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் மீண்டும் காதலில் விழுந்த அபிஷேக் ராஜா, கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தினார். அதன்படி ஸ்வாதி என்பவரை காதலிப்பதாக குறிப்பிட்டு அவருடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார் அபிஷேக்.
Abishek Raja wedding Photos
இந்நிலையில், அபிஷேக் ராஜா - ஸ்ருதி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது திருமணம் என்பதால் சிம்பிளாக நடத்தி முடித்துள்ளார் அபிஷேக் ராஜா, இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். திருமண கோலத்தில் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... 9 வருஷமா ஒரு பிளாப் கூட இல்ல - ஆனாலும் அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடும் பிரபல மாஸ் நடிகர்