Naadu: பிக்பாஸ் தர்ஷன் நடிப்பில்.. மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலையும் சொல்ல வரும் நாடு!
பிக்பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள நாடு திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தர்ஷனை வைத்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் எடுப்பதாக அறிவித்த படம், இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த கூகுள் குட்டப்பன் படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், அடுத்தடுத்த தன்னுடைய பட தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்தினார் தர்ஷன்.
அந்த வகையில், முதன்முறையாக கிராமம் சார்ந்து படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில், ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ள நாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Rajinikanth: ஷிகர் தவனுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்!
ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் இந்த படத்தில் தயாரித்துள்ளனர். மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் தான் நாடு.. இதில் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க, கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, RS சிவாஜி, இன்பகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இப்படம் முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ள நிலையில், சக்தி ஒளிப்பதிவு செய்துளளர். PK என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.