Beauty Tips : 20 நிமிடத்தில் முகம் பொலிவாக இருக்க 'இந்த' கோடைகால பழங்களில் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
கோடை காலத்தில், உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். இதற்கு இந்த சீசனில் கிடைக்கும் பழங்களை பயன்படுத்தி உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்.
கோடை காலத்தில் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், வலுவான சூரிய ஒளியின் காரணமாக, சருமத்தில் இருக்கும் ஈரப்பதமும் மறைந்துவிடும். இதனால் சருமம் விரைவில் வறண்டும், மந்தமாகவும் மாறத் தொடங்குகிறது.
இந்த காரணத்திற்காக, பலர் அடிக்கடி பார்லர்களுக்குச் சென்று அதிக காசு கொடுத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இப்படி செய்தும் தோலில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இதற்கு கோடை காலத்தில் வரும் பழங்களை பயன்படுத்துவது அவசியம். இதை வைத்து உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக்குகள் செய்யலாம். அவை..
ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்: ஸ்ட்ராபெர்ரி சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், சருமத்தை பளபளக்கும். மேலும், பிற சரும்ம பிரச்சனைகளில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது. எனவே, இதன் ஃபேஸ் பேக்கையும் செய்ய, முதலில் ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் தேன் சேர்த்து அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
கிவி ஃபேஸ் பேக்: கிவி சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை பளபளப்பாகவும், முகப்பருவை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. இதை வைத்து ஃபேஸ் பேக் செய்ய முதலில், கிவியின் தோலை அகற்றி அதை நன்கு சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் அதை போட்டு பிசைந்து, பின் அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கி, அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக இருக்க நீராவி பிடிங்க..
தர்பூசணி ஃபேஸ் பேக்: தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பதால், இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே, இதன் ஃபேஸ் பேக்கையும் செய்ய முதலில், தர்பூசணியை நன்றாக மசித்து, அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை சுத்தம் செய்தால், உங்கள் முகம் பொலிவடையும். நீரேற்றமாகவும் இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D