அட்லீக்கு பான் - இந்தியா என்ற வார்த்தையே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன பதில்..
ஜவானை விட பெரிய படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கபோவதாக கூறிய அட்லீ பான் - இந்திய சினிமா என்ற தனக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த அட்லீ, ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் ஏபிபி கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசிய அட்லீ பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். ஜவானை விட பெரிய படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கபோவதாக கூறிய அட்லீ பான் - இந்திய சினிமா என்ற தனக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.
அப்போது அட்லீயிடம் தென்னிந்திய பார்வையாளர்கள் ஏன் ஹிந்தி திரைப்படங்களை ஏற்கவில்லை, இந்த போக்கு எப்போது மாறும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அட்லீ, “வெளிப்படையாகச் சொல்வதானால், ஷோலே படம் முழுக்க முழுக்க நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். தென்னிந்திய மக்கள் ஹிந்திப் படங்களைப் பார்ப்பதில்லை என்று அர்த்தம் இல்லை.. ஷாருக் சார் படங்கள், சல்மான் சார் படங்கள், ஹிரித்திக் சார் படங்கள் எல்லாம் பார்த்திருக்கோம், 3 இடியட்ஸ் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட்.
Atlee
எனவே, எந்த நல்ல கண்டெண்ட் உள்ள படம் வந்தால் அதை அனைவரும் பார்க்கிறார்கள். பான்-இந்தியா என்ற வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. ”இந்தியா ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. மொழிகள் வெறும் தகவல் தொடர்பு முறையே தவிர அவை அறிவு இல்லை.. அதனால் இந்திய சினிமாவில் எந்த நல்ல உள்ளடக்கம் வெளிவருகிறதோ அதை அனைவரும் பார்க்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, கேஜிஎஃப் முழு நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஆனால், இந்தி பார்வையாளர்களுக்கு யாஷ் யார் என்று தெரியவில்லை, கேஜிஎஃப் பார்த்த பிறகு யாஷ் இந்திய சூப்பர் ஸ்டாராக மாறினார். புஷ்பாவில் அல்லு அர்ஜுனுக்கும், லியோ படத்தில் தளபதி விஜய்க்கும் அல்லது மற்ற நடிகர்களுக்கும் இதுவே பொருந்தும். எனவே எனது கண்ணோட்டத்தின்படி, நாம் அனைவரும் ஒன்று என்று நான் நினைக்கிறேன், நமது படங்களை இந்திய திரைப்படங்கள் அல்லது இந்திய திரைப்பட இயக்குனர் என்று அழைக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்..
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
அட்லீ தற்போது தனது இரண்டாவது பாலிவுட் படமான பேபி ஜான் படத்திற்கு தயாராகி வருகிறார், இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அட்லீ மற்றும் முராத் கெடானி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கலீஸ் இயக்கி உள்ளார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படம் மே 31, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Baby John tamil remake of theri title announced
பேபி ஜான் என்பது தமிழில் விஜய், சமந்தா,எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான தெறியின் ரீமேக் ஆகும். அட்லி இயக்கியிருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..