MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anna serial : பால்குடத்தில் ஆசிட்... ரத்னா எஸ்கேப் ஆனது எப்படி? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

Anna serial : பால்குடத்தில் ஆசிட்... ரத்னா எஸ்கேப் ஆனது எப்படி? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி எடுக்கும் பால்குடத்தில் முத்துப்பாண்டி ஆசிடை கலந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 19 2024, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் பரணி எடுக்கும் பால்குடத்தில் முத்துப்பாண்டி ஆசிடை கலந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கோவிலில் ரத்னா பால் குடம் எடுக்க தயாராக, பூசாரி பூஜை செய்ய எல்லோரையும் சன்னிதானத்திற்கு கூட்டிச்சென்ற நிலையில், கோவிலுக்கு வந்த நான்கு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து உண்டி கோலை வைத்து பானையை உடைத்து விடுகின்றனர். 

24
Zee Tamil Anna serial

Zee Tamil Anna serial

பிறகு பரணியும் பாக்கியமும் வெளியே வர பானை உடைந்து இருப்பதை பார்த்து இந்த விஷயம் ரத்னாவுக்கு தெரிய வேண்டாம் என்று பானையை மாற்றி வைக்கின்றனர். பிறகு ரத்னா பால்குடம் எடுக்கும் வேண்டுதலை நிறைவு செய்கிறாள். அடுத்ததாக அந்தப் பகுதி ஸ்கூல் பங்க்ஷனுக்கு சண்முகத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுக்க, அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்... கோவை மக்களே... நல்லா குத்தி விட்றுங்க; இனி நம்ம ஊர் பக்கம் வரவே கூடாது - வேட்டையன் பட பிரபலத்தின் ட்வீட் வைரல்

34
Anna serial Update

Anna serial Update

என்னால படிக்க முடியாம வெளியே அனுப்புன ஸ்கூலுக்கு நான் சிறப்பு விருந்தினராக போகப்போறேன் என்று சண்முகம் சந்தோஷப்படுகிறான். பரணி என்னால் தானே நீ படிக்க முடியாமல் போச்சு என்று பழைய விஷயத்தை சொல்கிறாள். மறுபக்கம் வாத்தியார் ஒருவர் சௌந்தரபாண்டியை சந்தித்து ஸ்கூல் நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையை கொடுக்க, சண்முகத்தின் பெயருக்கு கீழே தனது பெயர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாத்தியாரை பிடித்து அடிக்க, அவர் பத்திரிக்கையை நான் அடிக்கல பிரின்சிபல் தான் அடிச்சாரு. அவர்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிடுகிறார். 

44
Anna serial Today Episode

Anna serial Today Episode

சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. அந்த சண்முகம் ஸ்கூல் பங்க்ஷன்க்கு வரக்கூடாது என்று சொல்கிறார். சனியன் சண்முகத்துடன் நீ ஸ்கூல் பங்க்சனுக்கு போகாத என்று சொல்ல, அவன் ஏன் என்று கேட்க, இந்த டிரஸ்ல ஸ்கூலுக்கு போன நல்லா இருக்காது என்று சொல்ல, ஏன் அந்த சௌந்தர பாண்டி நான் வரக்கூடாதுன்னு சொன்னானா என்று சண்முகம் கேட்க சனியன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Lok Shaba Election 2024: தமிழக முதலவர் ஸ்டாலின் முதல்... விஜய பிரபாகரன் வரை! வாக்களித்த அரசியல் பிரபலங்கள்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved