MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anna Serial : அண்ணா சீரியல்: முத்துப்பாண்டியை திருமணம் செய்தது ஏன்? இசக்கி சொன்ன உண்மையால் உடைந்துபோன ஷண்முகம்

Anna Serial : அண்ணா சீரியல்: முத்துப்பாண்டியை திருமணம் செய்தது ஏன்? இசக்கி சொன்ன உண்மையால் உடைந்துபோன ஷண்முகம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் அரிவாளை வைத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2024, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டி கழுத்தில் அரிவாளை வைக்க முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் அரிவாளை வைத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது முத்துப்பாண்டி என் அப்பாவை விடு, இல்லனா உன் தங்கச்சி கழுத்தை அறுத்துடுவேன் என்று சொல்ல, இசக்கி என்னை பத்தி கவலைப்படாதே அண்ணே, அவன் கழுத்தை அறு என்று அதிர்ச்சி கொடுக்க, ஷண்முகம் சௌந்தரபாண்டியை தள்ளி விட்டு இசக்கியை காப்பாற்றி முத்துபாண்டியை அடித்து கீழே தள்ளுகிறான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

இசக்கி உனக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் தான் நான் வந்தேன், நீ இவங்களை கொன்னுட்டு கொலைகாரனாகி ஜெயிலுக்கு போய்ட கூடாது, ரத்னா அக்காவுக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமையனும்னு தான் வந்தேன் என்று குடும்பத்திற்காக செய்த தியாகத்தை உடைக்கிறாள். என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க என்று சொல்ல, ஷண்முகம் உன்ன இப்போ எல்லாம் கூட்டி போக மாட்டேன். உன்னை கூட்டி வந்ததற்காக இவங்க படாத பாடு படணும், உன்னை பார்த்தாலே தெறித்து ஓடணும். அப்பறம் என் தங்கச்சியாக வீட்டிற்கு கூட்டி போறேன் என்று கிளம்பி செல்கிறான். 

இதையும் படியுங்கள்... Karthigai deepam : போலீசுக்கு ஹிண்ட் கொடுத்த தீபா... அதிர்ச்சியில் ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

34
Anna Serial Update

Anna Serial Update

இசக்கி சொன்ன வார்த்தைகளை நினைத்து ஷண்முகம் கண்ணீருடன் வண்டியை ஓட்ட, காற்றில் அவன் கண்ணீர் பரணி மீது பட அவளும் வருத்தப்படுகிறாள். இங்கே இசக்கி எதுவும் நடக்காதது போல தட்டு நிறைய சாப்பாட்டை போட்டு சாப்பிட, இவ்ளோ கலவரம் நடந்திருக்கு சாதாரணமாக சாப்பிடுற என்று பாக்கியம் கேட்க, இவனுங்கள ஓட ஓட விரட்டணும், அதுக்கு உடம்புல தெம்பு வேண்டும் என்று சாப்பிடுகிறாள். மறுபக்கம் ஷண்முகம் வீட்டிற்கு வர தங்கைகள் என்னாச்சு என்று கேட்க ஷண்முகம் ஒன்னும் ஆகல என்று ரூமுக்குள் சென்று விடுகிறான்.

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

பரணி தப்பா எதுவும் நடக்கல என்று சொல்லி கொண்டிருக்க, ரூமுக்குள் ஷண்முகம் இசக்கி போட்டோவை வைத்து கொண்டு சத்தம் போட்டு கதறி அழ, எல்லாரும் பதறி உள்ளே ஓடுகின்றனர். உன்ன நான் தப்பா நினைச்சிட்டேன், என் தங்கச்சி இந்த குடும்பத்தோட குல தெய்வம் என்று அழ, தங்கைகளும் சண்முகத்தை கட்டி பிடித்து அழுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Kanaa Serial : திருமணம் காரணமாக விலகிய நாயகி... கனா சீரியலின் ஹீரோயின் அதிரடியாக மாற்றம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved