- Home
- Gallery
- 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்த பெண்; இன்று சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார்! ஆனா நயன்தாரா இல்ல- யார் அந்த நடிகை
15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்த பெண்; இன்று சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார்! ஆனா நயன்தாரா இல்ல- யார் அந்த நடிகை
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் 15 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து இன்று டாப் ஹீரோயினாக உயர்ந்துள்ள நடிகை பற்றி பார்க்கலாம்.

kangana ranaut
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பல நடிகர்கள் ஊரைவிட்டு ஓடி வந்த கதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சினிமா ஆசையில் ஒரு நடிகை ஊரைவிட்டு ஓடிவந்த கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அவரைப்பற்றி தான் தற்போது பார்க்க இருக்கிறோம். படிப்பை பாதியில் விட்டுவிட்டு 15 வயதிலேயே வீட்டைவிட்டு ஓடி வந்து தங்க இடமின்றி பிளாட்பாரத்தில் தங்கி கஷ்டப்பட்ட அந்த பெண் இன்று லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
Actress kangana ranaut
அவர் வேறுயாருமில்லை நடிகை கங்கனா ரனாவத் தான். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மந்தி மாவட்டத்தில் பாம்பியா என்கிற ஊரில் பிறந்த ராஜ்புட் குடும்பத்தை சேர்ந்த பெண் தான் கங்கனா. இவரது தாய் ஆஷா பள்ளி ஆசிரியை, இவரது தந்தை அமர்தீப் ஒரு பிசினஸ்மேன். கங்கனாவுக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பியும் உள்ளனர். கங்கனாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்துள்ளது. ஆனால் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Bollywood Actress kangana ranaut
இதனால் வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த கங்கனா, 15 வயதில் மும்பைக்கு ஓடி வந்துவிட்டார். இங்கு தங்க இடம் கிடைக்காமல் பிளார்பார்மில் தூங்கி பல கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார். பின்னர் 19 வயதில் கங்கனாவுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. அனுராஜ் பாசு இயக்கிய கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானார் கங்கனா. அப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன.
இதையும் படியுங்கள்... 3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; போதைக்கு அடிமையாகி மீண்ட இந்த ராஜாவீட்டு கன்னுக்குட்டி யார் தெரிகிறதா?
BJP kangana ranaut
இதையடுத்து பேஷன் என்கிற படம் தான் கங்கனாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிய கங்கனாவுக்கு குயின், மணிகர்னிகா, தனு வெட்ஸ் மனு ஆகிய படங்கள் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இந்த படங்களெல்லாம் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள்.
kangana ranaut life
அதுமட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தியது கங்கனாவின் தனு வெட்ஸ் மனு திரைப்படம் தான். அப்படத்தின் மூலம் பாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராகவும் உருவெடுத்தார். சினிமாவில் நடக்கும் அரசியல்களையும் அவர் தோலுரிக்க தவறியதில்லை. குறிப்பாக பாலிவுட்டில் நெபோடிஸம் தலைதூக்கியதை வெளிச்சம் போட்டு காட்டினார் கங்கனா.
BJP Candidate kangana ranaut
நடிகையாக மட்டுமின்றி இயக்குனராக ஜொலித்த கங்கனா மணிகர்னிகா என்கிற மாஸ் ஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது அவர் இயக்கத்தில் எமர்ஜென்ஸி என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. சினிமாவைப்போல் அரசியலிலும் களம் கண்டுள்ள கங்கனா தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த ஊரான மந்தி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தெறி பேபி வந்தாச்சு... நேற்று சிவகார்த்திகேயன்... இன்னைக்கு இவரா? குழந்தை பிறந்த குஷியில் பிரபல மாஸ் ஹீரோ