MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; போதைக்கு அடிமையாகி மீண்ட இந்த ராஜாவீட்டு கன்னுக்குட்டி யார் தெரிகிறதா?

3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; போதைக்கு அடிமையாகி மீண்ட இந்த ராஜாவீட்டு கன்னுக்குட்டி யார் தெரிகிறதா?

ஒரு காலத்தில் ராஜாவீட்டு கன்னுக்குட்டியாக இருந்த பிரபலம் தற்போது கோலிவுட்டின் இளவரசனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அவரைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 04 2024, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
yuvan shankar Raja

yuvan shankar Raja

இசை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இளையராஜா தான். அந்த அளவுக்கு தன்னுடைய பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் இளையராஜா. அவரைப்போல் அவரின் வாரிசுகளும் சினிமாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றனர். அதிலும் முக்கியமாக இளையராஜாவின் கடைக்குட்டியான யுவன் சங்கர் ராஜா, தன் தந்தைக்கு நிகரான பெயரையும் புகழையும் பெற்று டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
yuvan shankar Raja childhood Photo

yuvan shankar Raja childhood Photo

16 வயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார் யுவன். அவர் முதன்முதலில் இசையமைத்த படம் அரவிந்தன். ஆரம்பத்தில் யுவன் இசையமைப்பில் வெளிவந்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்ததால் ராசியில்லாத இசையமைப்பாளர் என்று முத்திரை குத்தி வந்துள்ளனர். இந்த விமர்சனங்களால் துவண்டு போன யுவனுக்கு பக்க பாலமாக இருந்தது அவரின் அம்மா தானாம். யுவனுக்கு அம்மா ஜீவா என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.

37
yuvan shankar Raja with sivaji

yuvan shankar Raja with sivaji

அவர் தன்னை அம்மாவை மனதில் வைத்து ராம் படத்தில் இடம்பெறும் ஆராரிராரோ பாடலை உருவாக்கி இருக்கிறார். இந்த தகவலை அம்மாவிடம் சொல்லாமலே இருந்து வந்த யுவன், கடந்த 2011-ம் ஆண்டு ஒரு நாள் வீட்டிற்கு இரவு லேட்டாக வந்தபோது அவர் பசியுடன் இருப்பதை அறிந்த அவரது அம்மா, மகனுக்காக இரவில் சமைத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது டிவியில் ஆராரிராரோ பாடல் ஓடிக்கொண்டிருந்ததாம்.

47
yuvan shankar Raja, Ilaiyaraaja

yuvan shankar Raja, Ilaiyaraaja

அதைக் கேட்ட யுவனின் தாயார் நீ இசையமைத்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் என கூறி இருக்கிறார். என்னை நீ தாலாட்டி தூங்க வைப்பது போல இந்த பாட்டு இருக்கிறது என சிலாகித்து கூறி இருக்கிறார். இதைக்கேட்ட யுவன் மிகவும் சாந்தோஷம் அடைந்திருக்கிறார். ஆனால் அந்த சந்தோஷம் நான்கு நாட்களுக்கு தான் நீடித்து இருக்கிறது. அந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களில் யுவனின் தாயார் ஜீவா மரணமடைந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்... டிஆர்பி-யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி

57
yuvan shankar Raja with his Mom

yuvan shankar Raja with his Mom

தனது உலகமாய் இருந்த தாய் மரணமடைந்ததை யுவனால் ஜீரணிக்க முடியவில்லை. உலகமே இருண்டது போல் ஆகிவிட, தாயின் மறைவுக்கு பின்னர் போதைக்கு அடிமையான யுவன், சுமார் இரண்டு ஆண்டுகள் சரிவர படங்களுக்கும் இசையமைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவரது முதல் இரண்டு திருமணமும் தோல்வியில் முடிந்ததால் விரக்தியில் இருந்த யுவன், அதன்பின்னர் நிஷா என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்துகொண்ட பின்னர் தான் அவரது வாழ்க்கையே மாறி இருக்கிறது.

67
yuvan shankar Raja Daughter

yuvan shankar Raja Daughter

அதிலும் யுவனுக்கு ஜியா என்கிற மகள் பிறந்ததும் ஒரு அதிசய நிகழ்வாகவே இருந்திருக்கிறது. யுவனின் உயிருக்கு உயிரான அவரது தாயார் ஜீவாவின் பிறந்தநாள் அன்றே அவரது மகள் ஜியா பிறந்திருக்கிறார். இதனால் தன் தாய்க்கு மிகவும் பிடித்த பாடலான ஆராரிராரோ பாடலில் இடம்பெறும், ‘இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற’ என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப தன் தாயே தனக்கு மகளாக பிறந்திருக்கிறார் என யுவன் மிகுந்த உற்சாகம் அடைந்ததோடு, போதையில் இருந்தும் மீண்டு வந்துவிட்டாராம்.

77
yuvan shankar Raja Rare Childhood Photo

yuvan shankar Raja Rare Childhood Photo

அதன்பின்னர் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்த யுவன் சங்கர் ராஜா, தான் இழந்த இடத்தை குறுகிய காலத்திலேயே மீண்டும் பிடித்துவிட்டார். கோலிவுட்டின் இசை இளவரசனாக கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா, குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Nayanthara : பூந்தோட்டத்தில் வலம் வந்த வண்ண மலர்.. வேகேஷன் மோடில் லேடி சூப்பர் ஸ்டார் - லேட்டஸ்ட் வீடியோ இதோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved