- Home
- Gallery
- தெறி பேபி வந்தாச்சு... நேற்று சிவகார்த்திகேயன்... இன்னைக்கு இவரா? குழந்தை பிறந்த குஷியில் பிரபல மாஸ் ஹீரோ
தெறி பேபி வந்தாச்சு... நேற்று சிவகார்த்திகேயன்... இன்னைக்கு இவரா? குழந்தை பிறந்த குஷியில் பிரபல மாஸ் ஹீரோ
நேற்றூ நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மகன் பிறந்துள்ளதாக அறிவித்த நிலையில், இன்று பிரபல மாஸ் நடிகர் தனக்கு மகள் பிறந்துள்ள தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

Varun Dhawan Natasha Blessed with a Baby Girl
பாலிவுட் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான நடாஷா த்லால் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வருண் தவான் - நடாஷா ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது. அதன்படி தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை நடிகர் வருண் தவான் இன்ஸ்டாவில் தெரிவித்திருக்கிறார்.
Varun Dhawan wife Natasha
ஜூன் 3-ம் தேதி தனக்கு மகள் பிறந்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வருண் தவான், அதை பேபி தவான் என பதிவிட்டு இருக்கிறார். குழந்தையும், தன் மனைவி நடாஷாவும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி இருக்கும் வருண் தவான் - நடாஷா ஜோடிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் என ஏராளமான பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Sivakarthikeyan: 3-ஆவது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!
Varun Dhawan, Keerthy Suresh
நடிகர் வருண் தவான் நடிப்பில் தற்போது பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்து உள்ளார். இது தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படம் மூலம் கீர்த்தி பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.
sivakarthikeyan, varun dhawan
நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியிட்டு இருந்தார். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை நடிகர் வருண் தவான் தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மர்ம நபரின் போலித்தளத்தில் சிக்கிய அஜித் மனைவி..! ரசிகர்களை எச்சரித்து... நடிகை ஷாலினி போட்டு ஷாக்கிங் போஸ்ட்!