Rashmika: நடிகை ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ விவகாரம்! கடும் நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நவீன வளர்ச்சியின் ஒரு பகுதியாக, அடுத்தடுத்து பல தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் பிரதிபலிப்பு ஒரு பக்கம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும், மற்றொருபுறம் அதனால் ஏற்படும் விளைவுகள் பய உணர்வை நெஞ்சில் பாதிக்கின்றது. அந்த வகையில் போட்டோ ஷாப்பை மிஞ்சும் விதத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்படும் வீடியோக்கள் உண்மையான வீடியோ போலவே இருப்பது தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் முகத்தை மட்டும் இன்றி, அவர்களின் உதடு அசைவு, குரல் போன்றவற்றை கூட மாற்றலாம் என்பது தான் அதிர்ச்சிகரமான விஷயம். இது போன்ற கண்டுபிடிப்புகளால் பெண்கள் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தனர். சினிமா பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மோடியை தரமான பாடகராக்கியது உள்ளது AI தொழில்நுட்பம்.
அதே போல் கடந்த வாரம், ஆபாசமான உடையில் லிப்ட்டில் இருந்து ராஷ்மிகா வந்து பேசுவது போல், பேக் வீடியோ ஒன்று வெளியானது. இந்த போலி வீடியோவுக்கு அமிதாப்பச்சன் உட்பட பலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், தற்போது இந்த டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இன்று நடிகைகளுக்கும் நேரும் இந்த விஷயம் நாளை, சாதாரண பெண்களையும் பாதிக்கும். பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், இது போன்ற வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.