Radhika: 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவுக்கு முன்பு நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், ராதிகா ஹீரோயினாக அறிமுகமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகை யார்? என்கிற தகவல் பல வருடங்களுக்கு பின்னர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான கதைகளை எழுதி, இயக்கி, பிரபலமானவர் இயக்குனர் பாரதி ராஜா. அந்த வகையில் இவர் 1977 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான, '16 வயதினிலே திரைப்படம்' வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை கண்டதோடு மட்டுமின்றி.. வெள்ளி விழாவும் கொண்டாடியது. இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பாரதி ராஜா பெற்றார்.
இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீதேவியும், ஹீரோவாக கமல்ஹாசனம் நடித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார். மேலும் காந்திமதி, சத்யஜித், கவுண்டமணி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படமாக பாரதிராஜா இயக்கியது தான் எம் ஆர் ராதாவின் மகள், ராதிகா ஹீரோயினாக அறிமுகமான 'கிழக்கே போகும் ரயில்'.
1978ல் வெளியான இந்த படத்தில், ஹீரோவாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர் சுதாகர் நடித்திருந்தார். மேலும் இப்படம் திரையரங்கில் 365 நாட்கள் ஓடி சாதனை செய்தது. பின்னர் இப்படம் தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் பல வருடங்களுக்கு பின்னர் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு கிராமத்து சாயலுடன்.. வெள்ளந்தியான முக தோரணை கொண்ட ஒரு பெண்ணை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என பாரதிராஜா முடிவு செய்த நிலையில், அதற்கு அவருடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகை வடிவுக்கரசிதானாம். இவருடைய முகம் சற்று முதிர்ச்சியாகவும், தோற்றத்தில் மிகவும் ஒல்லியாகவும் இருந்ததால், ஹீரோயின் விஷயத்தில் பாரதி ராஜா திருப்தி அடையாமல் இருந்துள்ளார்.
அப்போதுதான் நுனி நாக்கு ஆங்கிலத்தோடு, லண்டனில் இருந்து படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வந்து தன்னுடைய அம்மாவுடன் தங்கி இருந்த, நடிகை ராதிகாவை பார்த்துள்ளார். பாரதி ராஜா, ராதிகா வீட்டிற்கு பக்கத்திலேயே இருந்ததால், அவரிடமே நேரடியாக சென்று தன்னுடைய படத்தில் நடிக்க முடியுமா? என கேட்க, அப்போது நடிப்பதில் சற்றும் விருப்பமில்லாத ராதிகா அந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது.
Radhika Sarathkumar
மேல் படிப்புக்காக மீண்டும் லண்டன் செல்வதில் ஆர்வமாக இருந்த ராதிகாவிடம், அவருடைய அம்மா தான் டைம் பாஸுக்காக இந்த படத்தில் மட்டுமாவது நடித்துவிட்டு செல், எனக் கூறியுள்ளார். பின்னர் மேல்படிப்புக்காக நீ மீண்டும் லண்டன் செல் என கூற, ராதிகா அரை மனதுடன் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
தமிழே தெரியாத ராதிகாவை மதுரை தமிழில் பேச வைத்த பாரதி ராஜாவின், 'கிழக்கே போகும் ரயில்' மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது மட்டும் இன்றி, பல திரையரங்குகளில் 365 நாள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர துவங்கியதும், ராதிகா லண்டனுக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
அன்று 'கிழக்கே போகும் ரயிலில்' ஏரி பயணிக்க தொடங்கிய ராதிகாவின் சினிமா வாழ்க்கை இன்றுவரை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறது. ஒரு வேலை ராதிகா, கிழக்கே போகும் ரயில் படத்தில் வடிவுக்கரசி நடித்திருந்தால், ராதிகா என்கிற அற்புதமான நடிகை கிடைத்திருப்பாரா? என்பது சந்தேகமே.