- Home
- Gallery
- Mia Khalifa: மூன்றே மாதத்தில்... டாப் ஸ்டாராக மாறிய மியா கலீஃபா! ஆபாச துறையில் இருந்து வெளியேறியது ஏன்?
Mia Khalifa: மூன்றே மாதத்தில்... டாப் ஸ்டாராக மாறிய மியா கலீஃபா! ஆபாச துறையில் இருந்து வெளியேறியது ஏன்?
மியா கலீஃபா... என்றதுமே இளைஞர்கள் பலருக்கும் நினைவுக்கு வருவது... அவரின் தாராள கவர்ச்சியும் அடல்ட் வீடியோக்களும் தான். சரி மியா பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தற்போது 31-வயதாகும் மியா கலீஃபா, லெபனானில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த உண்மையான பெயர் சாரா ஜோ சாமூன். லெபனானில் நடந்த உள்நாட்டுப் போரின் போது இவரின் பெற்றோர் லெபனானில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். தன்னுடைய சிறு வயதில் இருந்தே குடும்ப சூழ்நிலை காரணமாகவும், நிதி நெருக்கடியாலும் பல கஷ்டங்களை சந்தித்த மியா, அந்த கடினமான சூழ்நிலையிலும் பல்வேறு வேலைகள் செய்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார்.
அதன்படி எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், வரலாற்றில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சரியாக 10 வருடங்களுக்கு முன் அதாவது 2014-ஆம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் ஆபாச படங்களில் நடிக்க துவங்கினார்.
தன்னுடைய கஷ்டங்களையும், நிதி நெருக்கடியையும் சமாளிக்க வளர்ச்சி பாதையை தேர்வு செய்யும் நிலையில் இருந்த மியா, ஆரம்பத்தில் ஒரு வெப்கேம் மாடலாக மட்டுமே இருந்த நிலையில், பின்னர் பல்வேறு ஆபாச தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றினார்.
2014-ஆம் ஆண்டு ஆபாச துறையில் கால் பதித்த மியா 3 மாதங்களில் அந்த துறையில் டாப் ஸ்டாராக பார்க்கப்பட்டார். அவரது வீடியோக்கள் மிக பிரபலமாக மாறின. குறுகிய நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட ஆபாச படங்களில் நட்சத்திர லிஸ்டில் மியா கலீஃபாவும் இணைந்தார். PornHub என்கிற தளத்தின் நம்பர் 1 ஆபாச நட்சத்திரமாக மாறினார் மியா.
பின்னர் அந்த துறையில் இருந்து வெளியே வர முடிவு செய்த மியா கலீஃபா 2015-ஆம் ஆண்டின் ஆபாச துறையில் இருந்து வெளியேறினார். ஒருமுறை இவரிடம், ஆபாசத்துறையில் இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது. தான் கோடிகளில் சம்பளம் வாங்கவில்லை என்றும், ஒரு படத்தில் நடித்தால், 12 ஆயிரம் டாலர் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறினார்.
தன்னுடைய வீடியோ மூலம் பலன் அடைந்ததது நான் இல்லை என்றும்... மேலும் இந்த வேலை மூலம் தனக்கு வரும் பெயரும், பணமும் வேண்டாம் என முடிவு செய்து தான் வெளியேறியதாகவும் தெரிவித்தார். ஆபாச துறையில் இருந்து வெளியேற தனக்கு கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம் என்பதை முன்வைத்தார்.
ஆபாச துறையில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த திரையில் சில அப்பாவி பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மியா கலீஃபா தற்போது இன்ஸ்டாகிராமில் 26 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார். அதே போல் சுமார் 4.3 மில்லியன் பேர் பேஸ்புக்கிலும், 5 மில்லியன் பேர் ட்விட்டரிலும் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இதில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, வெயிட்டாக கல்லா கட்டி வருகிறார்.
2019 இல், மியா கலீஃபா அமெரிக்காவை சேர்ந்த, சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், பின் பல்வேறு காரணங்களால் ஒரே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுபிரிந்தார். இருப்பினும், இது அவரது இரண்டாவது திருமணம் ஆகும். மியா ஏற்கனவே 2011-யில் தன்னுடைய கல்லூரி காதலனை மணந்தார். 2014 இல் அவருடன் பிரிந்து. 2016 இல் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.