No மேக்கப் லுக்! சிங்கிள் ப்ரீட் சேலையில்... ரசிகர்கள் மனதை புன்னகையால் கொள்ளைகொள்ளும் ஹன்சிகா போட்டோஸ்!
நடிகை ஹன்சிகா துளியும் மேக்கப் இல்லாமல், புன்னகை பூவாக மாறி, சேலையில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
எத்தனையோ புது புது ஹீரோயின்கள், தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் ஒரு சில நடிகைகளின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அப்படி பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ஹன்சிகா.
நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தமிழ் திரையுலக ரசிகர்களின் மனைகளை தன்னுடைய அழகால் கொள்ளை கொண்டார்.
கொழுக்கு - மொழுக்கு அழகில், மெழுகு பொம்மை போல் இருந்த இவரை... ரசிகர்கள் பலர் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்க தொடங்கினர். இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'எங்கேயும் எப்போதும்', விஜய்க்கு ஜோடியாக 'வேலாயுதம்', சூர்யாவுடன் 'சிங்கம் 3', விஷாலுக்கு ஜோடியாக 'ஆம்பள' என அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு திரையுலகிலும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடிக்கும் போது, அவரை காதலிக்க துவங்கினார் ஹன்சிகா. இந்த காதல் திருமணம் வரை சென்ற நிலையில்... பின்னர் பிரேக் அப்பில் முடிந்தது.
சிம்புவிடம் இருந்து பிரிந்து விட்டாலும், தொடர்ந்து அவருடன் நட்பில் இருக்கும் ஹன்சிகா... கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான மஹா படத்திலும் அவருடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் அதிரடியாக, தன்னுடைய காதலர் சோஹைல் கதூரியா பற்றி அறிவித்த ஹன்சிகா, கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர், திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகா, நோ மேக்கப் லுக்கில்... எலகென்ட் அழகில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோஸில் தன்னுடைய புன்னகையால் ரசிகர்கள் மனதை வருடியுள்ளார் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.