MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Suriya Salary : கங்குவா படத்திற்கு குறைவான சம்பளம் வாங்கிய சூர்யா.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Suriya Salary : கங்குவா படத்திற்கு குறைவான சம்பளம் வாங்கிய சூர்யா.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

கங்குவா குறைவான சம்பளம் வாங்கி உள்ளதாகவும், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது

1 Min read
Author : Ramya s
| Updated : May 01 2024, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி அக்ஷன் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

28

இந்த படத்தில் பாபி தியோல், திஷா படானி, நட்ராஜன், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடிங் கிங்ஸ்லீ, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர். 

38

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. கங்குவா படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் தயாராகி வருகிறது.

48

இந்த படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்து வருகிறார். 2024-ம் ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கங்குவா மாறி உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

58

இந்த நிலையில் கங்குவா குறைவான சம்பளம் வாங்கி உள்ளதாகவும், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கங்குவா படத்திற்கு ரூ.28 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாரம்.

68

தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் அனைவரும் தற்போது ரூ.40 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் சூர்யா மட்டும் ஏன் இவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கி உள்ளார் என்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

78
Kanguva

Kanguva

ஆனால் அதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான 24 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.

 

88

இந்த நஷ்டத்தை ஈடு செய்யவே தற்போது சூர்யா மிக குறைவான சம்பளத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தன்னால் நஷ்டம் ஏற்பட்டதை சரி செய்யும் வகையில் தான் சூர்யா கங்குவா படத்திற்கு குறைவான சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved