ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட மனைவி.. அதுக்கு No சொல்லியாச்சு.. மீண்டு வரும் ரோபோ - குடும்பத்தோடு ஆன்மீக பயணம்!
மேடை கலைஞராக தனது கலை உலக பயணத்தை துவங்கி, அதன் பிறகு சின்ன திரையில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி கண்டு. தற்பொழுது வெள்ளி திரையில் நல்ல நடிகராக மின்னிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல நடிகர் தான் ரோபோ சங்கர்.
Robo Shankar
1990களின் இறுதியில் இருந்தே பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், 2013 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்ற படத்தில் சவுண்டு சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார் ரோபோ சங்கர்.
Robo Shankar Family Photos
அதன் பிறகு வெளியான துல்கர் சல்மானின் "வாயை மூடி பேசவும்" திரைப்படத்தில் இவர் நடித்த "மட்ட ரவி" கதாபாத்திரம் இவருக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, பெரிய அளவில் தனது உடல் எடையை இழந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.
Robo Shankar Family
ஆரம்ப கால கட்டத்தில் அவருக்கு அதிக அளவிலான குடிப்பழக்கம் இருந்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தனது மனைவி மற்றும் மகள்களின் அனுசரணையால் தீய பழக்கங்களில் இருந்து வெளியேறி, தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் நடிகர் ரோபோ சங்கர். அண்மையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் அவரை நேரில் சந்தித்து அவருக்கு சில அறிவுரைகள் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் மனைவி மற்றும் மருமகனோடு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
கடைசி நேரத்தில் 'சந்திரமுகி 2' படத்திற்கு வந்த சோதனை! புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!