- Home
- Gallery
- அப்பா தான் என் கேரியரை நாசம்பண்ணிட்டாருன்னு சொன்னாங்க! உண்மை இது தான்.. நடிகர் பிரசாந்த் போட்டுடைத்த ரகசியம்!
அப்பா தான் என் கேரியரை நாசம்பண்ணிட்டாருன்னு சொன்னாங்க! உண்மை இது தான்.. நடிகர் பிரசாந்த் போட்டுடைத்த ரகசியம்!
நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' பட புரமோஷனில் கலந்து கொண்ட போது, தன்னுடைய தந்தையால் என் கேரியர் நாசமானதாக சிலர் கூறியதன் பின்னணி பற்றி தெரிவித்துள்ளார்.

1990-ஆம் ஆண்டு, 'வைகாசி பொறந்தாச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரின் ஒரே மகனான பிரசாந்த். தன்னுடைய 17 வயதிலேயே சூப்பர் ஹிட் படத்தில் நடித்ததால், கோலிவுட் திரையுலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்த இவர், இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் நடித்த 'வண்ண வண்ண பூக்கள்', 'செம்பருத்தி', 'உனக்காக பிறந்தேன்', ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தது.
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு,மலையாளம் , ஹிந்தி, ஆகிய மொழிகளிலும் சில படங்களில் பிரசாந்த் நடித்துள்ளார். இவரின் போறாத காலம், சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்க வேண்டிய இவர், ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தளபதி விஜய்யுடன், 'கோட்' படத்தில் நடித்துள்ள பிரசாந்த், ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள 'அந்தகன்' படத்தில், ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வரும் பிரசாந்த், பிரபல ஊடகம் ஒன்றிற்கு கலா மாஸ்டர் எடுத்த பேட்டியில்... பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பிரஷாந்த் தன்னுடைய தந்தை என் கேரியரை நாசமாக்கி விட்டதாக சிலர் கூறுகிறார்கள். அதன் பின்னணி என்ன? என்பதன் ரகசியத்தை முதல் முறையாக போட்டுடைத்துள்ளார்.
விக்ரமுடன் மோத பயந்து பின் வாங்கினாரா பிரஷாந்த்? 'அந்தகன்' பட ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!
கலா மாஸ்டர் நீங்கள் நடிக்கும் படத்தின் கதையை கேட்பது நீங்களா அல்ல அப்பாவா என கேட்க, அதற்க்கு பிரஷாந்த் நான் தான் கேட்பேன். சில கதையில் அல்லது கதாபாத்திரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றால், அதை அப்பாவிடம் சொல்லுவேன். அவர் இயக்குனரிடம்... "பிரஷாந்துக்கு கதை ஓகே தான் ஆனால்... எனக்கு அது சரிப்பட்டு வரும் என தோன்றவில்லை என கூறி தன் மீதே பழியை போட்டு கொள்வார்".
இதனால் பிரஷாந்த் நல்லவர்தான் ஆனால் அவரின் கேரியரை கெடுத்தது அவரின் தந்தை என கூறி விடுவார்கள். அவரை யார் என்ன சொன்னாலும் அவர் எந்நேரமும் என்னை பற்றியே தான் நினைத்து கொண்டிருப்பார். நினைத்து கொண்டிருக்கிறார் என பிரஷாந்த் தன்னுடைய தந்தை பற்றி இந்த பேட்டியில் கூறியுள்ளார்.