MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரெஸ்ட் இல்லாமல் ஓடும் "ராசா கண்ணு".. இயக்குனர் அவதாரம் எடுக்கும் YouTuber - மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்!

ரெஸ்ட் இல்லாமல் ஓடும் "ராசா கண்ணு".. இயக்குனர் அவதாரம் எடுக்கும் YouTuber - மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்!

Actor Manikandan Next Movie : நடிகர் மணிகண்டன், சின்னத்திரையில் இருந்து தனது வாழ்க்கை பயணத்தை துவங்கி, இன்று தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறியுள்ளது அனைவரும் அறிந்ததே.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 21 2023, 07:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Manikandan

Manikandan

சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, அதன்பிறகு பண்பலை தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அவ்வப்போது தனக்கு திரையில் கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு பயணித்து வந்த நடிகர் தான் மணிகண்டன். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா 2 திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடிகராக வெள்ளித் துறையில் அறிமுகமானார்.

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே... திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகில் கயல் ஆனந்தி! போட்டோஸ்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vikram Vedha

Vikram Vedha

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த இவருக்கு, திரைத்துறையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் கடந்த 2017 ஆம் ஆண்டு புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான "விக்ரம் வேதா" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்ததோடு, அந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதி சிறந்த வசனகர்த்தா என்ற விருதையும் மணிகண்டன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

34
Raja Kannu

Raja Kannu

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா" அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து "வேட்டையன்" என்ற திரைப்படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்கத்தில் வெளியான "ஜெய் பீம்" என்ற திரைப்படத்தில் "ராஜா கண்ணு" என்கின்ற கதாபாத்திரம் இவருடைய புகழை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது என்றால் அது மிகையல்ல. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் அவர் ஹீரோவாக நடிக்க துவங்கியுள்ளார்.

44
Manikandan New Movie

Manikandan New Movie

ஏற்கனவே அறிமுகம் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான "குட் நைட்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற மணிகண்டன், தற்பொழுது "லவ்வர்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பட பணிகளே இன்னும் முடியாத நிலையில், பிரபல Nakkalties என்கின்ற யூட்யூப் சேனலில் பணிபுரிந்து வந்த ராஜேஸ்வர் காளிசாமி என்பவர் முதல் முதலாக இயக்குனராக களம் இறங்கவருக்கும் படத்தில் மணிகண்டன் நடிக்கவிருக்கிறார். 

இது மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு நடிகை சான்வீ மேகனா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க, பாடகர் வைசாக் இந்த படத்திற்கு இசையமைக்கவிற்பதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved