MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அன்னையின் நினைவாக... உழைக்கும் பெண்களை தேடி சென்று தங்க நாணயம் கொடுத்த நடிகர் ஆரி அர்ஜுனன்!

அன்னையின் நினைவாக... உழைக்கும் பெண்களை தேடி சென்று தங்க நாணயம் கொடுத்த நடிகர் ஆரி அர்ஜுனன்!

நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான, ஆரி அர்ஜுன் தன்னுடைய அன்னையின் நினைவாக கழ்டபட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் 10 பெண்களை தேடி சென்று தங்க நாணயம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 13 2024, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழின் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன்,  பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான், என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை  சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு  சர்ப்ரைஸ்   கிப்ட்டாக  தங்க நாணயம்  பரிசளித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன், தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் முத்தரசன் நடித்துள்ள 'அரிசி' படத்தின் படபிடிப்பு நிறைவு

35
aari arjunan

aari arjunan

இது குறித்து ஆரி அர்ஜுனன் கூறுகையில்.. ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். குறிப்பாக நம் இரத்த உறவுகளான அம்மா, மனைவி, அக்கா, தங்கை, குழந்தை, என அனைவரையும் தாண்டி, நமக்காகவும் இந்த சமூகத்திற்காகவும் உழைக்கக் கூடிய, கோடான கோடி மகளிர்கள் இங்கு இருக்கிறார்கள். என் அம்மாவின் நினைவாக சமூகத்திற்காக உழைக்கும்  மகளிர்  சிலரைச் சந்தித்து, சர்ப்ரைஸாக ஒரு சின்ன பரிசையும் அளிக்கும் பணியை, இன்று துவங்கியுள்ளேன். அத்தோடு இல்லாமல் எளிய வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில்  ஒவ்வரு வருடமும் இதை செய்ய போகிறேன். 

45

முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமல்லவா,  என் குடும்பதிர்க்காக உழைக்கும் மனைவிக்கு நன்றி  சொல்லி, அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது ஆனால் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லித்தர ஆரம்பிக்க வேண்டும் என்றார். 

Nila Wedding Photos: 40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை நிலா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

55
Aari

Aari

சாலைகளை சுத்தம் செய்யும் பணியாளர்  3 பேருக்கும், தெருவோர கூழ் கடை வைத்திருக்கும் பெண்கள் 2 பேர்,  பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர் மற்றும் திரைப்பட புரடக்சன் யூனிட்டில் பாத்திரம் கழுவும் 2  பேர் என பலதரப்பட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறியதுடன் தங்க நாணணயம் பரிசாக வழங்கினார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved