- Home
- Gallery
- ரம்பாவை விட்டு தள்ளுங்க... விஜய் வாங்கியுள்ள பிளாட்டில் 5 பிரபலங்கள் வீடு இருக்கா? டாய்லெட்டே 7 லட்சமாம்!
ரம்பாவை விட்டு தள்ளுங்க... விஜய் வாங்கியுள்ள பிளாட்டில் 5 பிரபலங்கள் வீடு இருக்கா? டாய்லெட்டே 7 லட்சமாம்!
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே, தளபதி விஜய் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் வாங்கியுள்ள அப்பார்ட்மெண்ட் பற்றிய பல தகவல்கள் கசிந்து வருகிறது. அந்த வகையில் இந்த அப்பார்ட்மெண்டில், வீடு வாங்கி உள்ள மேலும் 4 பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்ட விஜய், கடந்த சில வருடங்களாகவே நீலாங்கரையில் புதிதாக அவர் கட்டிய வீட்டில் தான் வசித்து வந்தார். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து பிரிந்து லண்டனில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் கருத்து வேறுபாடு, விவாகரத்து, என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்... ஒரு தரப்பினர் தன்னுடைய மகள் திவ்யா ஷாஷாவின் படிப்புக்காகவே சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறி வருகிறார்கள்.
நடிப்பை தொடர்ந்து, தீவிர அரசியலில் இறங்க தயாராகி உள்ள தளபதி விஜய்... தன்னுடைய 69 ஆவது படத்தை நடித்து முடித்த பின்னர், முழுமையாக திரையுலகில் இருந்து விலகி அரசியல் களத்தில் பயணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஆயத்த பணிகளும் ஒருபுறம் பரபரப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை தளபதி விஜய் 234 தொகுதியிலும் சந்திக்க உள்ளார்.
Suriya : ரசிகனின் வீட்டில் நிகழ்ந்த துயர சம்பவம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா
Thalapathy Vijay
இது ஒருபுறம் இருக்க, தற்போது விஜய் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில், புதிதாக அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி உள்ள தகவல் தீயாக பரவி வருகிறது. இந்த தகவலை பி ஆர் சுந்தர் எனும் மார்க்கெட் அனாலிசிஸ்ட் தன்னுடைய ஹோம் டூரில் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் ரம்பா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியான போது, ரம்பாவும் விஜய் வாங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டில் வீடு ஒன்றை வாங்கி இருப்பது தெரிய வந்தது. ஒரே அப்பார்ட்மென்டில் வசிப்பதால், தன்னுடைய நீண்ட கால நண்பரும், சக நடிகருமான விஜய்யை குடும்பத்துடன் சென்று சந்தித்து சர்பிரைஸ் கொடுத்தார். இந்த சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது.
தற்போது இந்த அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கி உள்ள மற்ற பிரபலங்கள் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை திரிஷாவும் இதே அபார்ட்மெண்டில் ஒரு வீட்டை வாங்கி உள்ளாராம். இவரைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஆர்யா, ஆகியோரும் இதே அப்பார்ட்மென்டில் தங்களுக்கு என தனி தனி குடியிருப்புகளை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீட்டில் அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ள நிலையில், டாய்லெட் மட்டுமே சுமார் 7 லட்சம் ஏழு லட்சம் என பி ஆர் சுந்தர் தன்னுடைய ஹோம் டூரில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஒவ்வொரு வீடுகளிலும் தியேட்டர், லிப்ட் வசதி, ப்ரைவேட் நீச்சல் குளங்கள், கொண்டு சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே அப்பார்ட்மெண்ட் இதுதான் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.