யார் இந்த முத்துக்குமரன்? பிக் பாஸ் டைட்டில் வென்றவரின் பின்னணி என்ன? சம்பளம் எவ்வளவு?
பிக் பாஸ் சீசன் 8 இல் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார்? அவரது பின்னணி என்ன? அவர் பெற்றுள்ள சம்பளம் எவ்வளவு? என அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
Who is Muthukumaran?
பிக் பாஸ் சீசன் 8 முடிவுக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக தொகுத்து வழங்கிய இந்த சீசன் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இல்லாமல் நகர்ந்தது. இந்த சீசன் இறுதியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சௌந்தர்யா ரன்னராக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், வெற்றியாளரான முத்துக்குமரன் யார்? அவரது பின்னணி என்ன? அவர் பெற்றுள்ள சம்பளம் எவ்வளவு? அனைத்தையும் இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Bigg Boss 8 title winner Muthukumaran
நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பேச்சாளருமான முத்துக்குமரன் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது யாரும் எதிர்பாராதது. முத்துக்குமரன் சிவகங்கையைச் சேர்ந்தவர். முத்துக்குமரனின் தாய் வீட்டு வேலைகள் செய்து, அவரைப் படிக்க வைத்தார். மகன் முத்துக்குமரனுக்கு சிறு வயதிலேயே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
நிறைய புத்தகங்களை வாசித்த முத்து, ரேடியா நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கேட்டு பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொண்டார். பேசிப் பேசி பழகி, படிப்படியாக பேச்சாளராக மாறினார். ஒரு கட்டத்தில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு வந்த முத்துக்குமரன் தன்னுடைய பேச்சுத் திறமையால் வாய்ஸ் ஓவர் ஆர்ட்ஸ்டிட்டாக தன் பயணத்தைத் தொடங்கினார்.
முத்துக்குமரனின் குரல் வளமும் பேச்சாற்றலும் அவருக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியை வாங்கித் தந்தன. பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த அவர், விஜய் டிவியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியின் மூலம் உலகிற்கு அறிமுகமானார். இதன் மூலம் அவருக்கு பல மேடைகளில் பேசும் வாய்ப்புகள் அமைந்தன.
இந்தச் சூழலில்தான் எதிர்பாராத திடீர் வாய்ப்பாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்தன. டாஸ்குகளை சிறப்பாகச் செய்து அசத்திய முத்துக்குமரன் ரசிகர்களின் ஆதரவுடன் பைனல் வரை முன்னேறி வெற்றியாளராகவும் வந்திருக்கிறார்.
Muthukumaran Biography
சமூக வலைத்தளங்களில் முத்துக்குமரனின் சம்பளம் எவ்வளவு என்ற பேச்சும் அதிகரித்துள்ளது. அவருக்கு ரூ. 40.5 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும். அவர் எடுத்த பணப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரமும் சேர்ந்தால் ரூ.41 லட்சம் அவருக்குக் கிடைத்திருக்கும். இதுதவிர அவருக்குச் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது
Bigg Boss Muthukumaran
முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தபோது ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளம் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ரூ.10.5 லட்சம் கிடைத்திருக்கும். இதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முத்துக்குமரனுக்கு ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.