- Home
- குற்றம்
- கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்
தேனியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது அண்ணனை, கணவனும் மாமனாரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்தவர் சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். இவருக்கு சின்னமனூரை சேர்ந்த நிகிலா(32) என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் வசித்து வந்த நிலையில், பிரதீப் அமமுக கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நிகிலா தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் பேசி கடந்த வாரம் நிகிலாவை பிரதீப்புடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிகிலா சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து பிரதீப்புடன் சேர்ந்து வாழ முடியாது என பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டு தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக் கொண்டு முத்தையன் செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிவக்குமார், பிரதீப் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பிரதீப் விவேக்கை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அண்ணனை கொலை செய்ததை நேரில் கண்டு மயங்கிய நிகிலாவை மாமனார் சிவக்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளனர். இதனை கண்டு அப்பகுதியினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும், அவரது மகன் பிரதீப் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள்.
இது தொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து இரண்டு பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

