- Home
- குற்றம்
- அயன் ஸ்டைலில் போதை பொருள் மாத்திரையை விழுங்கிய நபர்...ரூ.8 கோடி மதிப்பிலான ஹெராயின் பிடிபட்டது!
அயன் ஸ்டைலில் போதை பொருள் மாத்திரையை விழுங்கிய நபர்...ரூ.8 கோடி மதிப்பிலான ஹெராயின் பிடிபட்டது!
அந்த நபரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு இனிமா கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் வயிற்றில் வைத்து அவர் கடத்தி வந்தது போதை பொருள் என தெரியவந்துள்ளது.

smuggling
சென்னை விமான நிலையத்தில் வயிற்றில் போதை பொருளை கடத்தி வந்த நபர் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பெரும் அளவில் போதைப் பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகின்றன. பெரும்பாலும் துபாயில் இருந்த சென்னை வரும் விமானங்களில் இது போன்ற கடத்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
smuggling
சமீபத்தில் சுங்க இலக்க கமிஷனர் உதய் பாஸ்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் துபாய் பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துபாய் விமான நிலைய விமானத்தில் வந்த டான்சானியா நாட்டை சேர்ந்த ஜோசப் பாட்ரி என்பவர் சந்தேகிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். அதோடு விசாரணையில் முன்னும் பின்னுமாக பேசியதால் அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர் சுங்க இலாக்கா அதிகாரிகள்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மாணவி தங்கியிருந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..
smuggling
அப்போது உகண்டாவில் இருந்து துபாய் வழியாக சுற்றுலா பயணியாக வந்ததாக அவர் கூறியுள்ளார். இருந்தும் அவர் பேச்சில் நம்பிக்கை இல்லாததால் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது தனி அறைக்கு கொண்டு சென்று உடற்பரிசோதனை செய்த போது வயிற்றில் ஏதோ மர்ம பொருள் மறைத்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் ஜோசப்பை ஸ்கேன் செய்தனர் அதில் வயிற்றில் அதிகமான மாத்திரைகள் இருப்பதாக தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு...அச்சுறுத்தும் கஞ்சா சாக்லேட்.. குறிவைக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.. கோவையில் பரபரப்பு..
smuggling
இதையடுத்து அந்த நபரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு இனிமா கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் வயிற்றில் வைத்து அவர் கடத்தி வந்தது போதை பொருள் என தெரியவந்துள்ளது. போதை பொருளை 86 மாத்திரை கேப்சூல்களில் அடைத்து அந்த நம்பர் விழுங்கியது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க:தீவிரவாதிகளின் பிடியில் தமிழ்நாடு.. ஆளுநர் மாளிகையில் அலறிய பாஜக மாநில து.த கே.பி ராமலிங்கம்.
அதில் இருந்தது ஹெராயின் போதை மாத்திரைகள் என கண்டறிந்தனர் அதிகாரிகள் ரூபாய் 8 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 266 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதை மாத்திரையை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தான்சானிய நாட்டு வாலிபர் ஜோசப் கைது, செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்கு கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.