- Home
- குற்றம்
- அரசு பணியில் இருந்து கிட்டு விஏஓ அலுவலகத்தில் இப்படியா செய்வீங்க! வசமாக சிக்கிய சசிகுமார், ஜெயா!
அரசு பணியில் இருந்து கிட்டு விஏஓ அலுவலகத்தில் இப்படியா செய்வீங்க! வசமாக சிக்கிய சசிகுமார், ஜெயா!
கோபிசெட்டிபாளையம் அருகே தாய் சொத்தில் பெயர் சேர்க்க விவசாயி ஜெயாவிடம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கேஏஎஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயா. இவர் விவசாயம் செய்து வருகிறார். ஜெயா என்பவர் தனது தாய் சொத்தில் பெயர் சேர்ப்பதற்காக கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார். பட்டாவில் பெயர் ரே்க்க வேண்டும் என்றால் 20,000 ரூபாயை கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார், மண்டல துணை வட்டாட்சியர் மணிமேகலை லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனை கேட்டு ஜெயா அதிர்ச்சி அடைந்தார். பணம் தர விரும்பாத ஜெயா ஈரோடு கருங்கல் பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கலிங்கியதற்கு விரைந்தனர். அப்போது ஜெயா கலிங்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரு.20000 ரூபாய் பணத்தை சசிகுமார் இடம் கொடுத்துள்ளனர்.
அப்போது சசிகுமாரிடம் பணத்தை வழங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தது மட்டுமல்லாமல் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபிசெட்டிபாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு 20000 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.