காதலன் முன்னிலையில் காதலியை சீரழித்த 3 கொடூரர்கள்.. வீட்டைவிட்டு ஓடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
கல்லூரி மாணவர்கள் 3 பேரால் காதலன் முன்னிலையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராஜஸ்தானின் ஜோத்பூரில் தனது காதலனுடன் தப்பிச் சென்ற 17 வயது சிறுமி, காதலன் முன்னிலையில் மூன்று கல்லூரி மாணவர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று குற்றவாளிகள் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதல்வர் அசோக் கெலாட், அவரது சொந்த ஊரான ஜோத்பூரில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) உமேஷ் மிஸ்ராவிடம் பேசினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று கெலாட் கூறினார். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை தமது அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை அஜ்மீரில் இருந்து தனது காதலனுடன் சிறுமி தப்பிச் சென்றுள்ளார். அவர்கள் பேருந்தில் சென்று இரவு 10:30 மணியளவில் ஜோத்பூரை அடைந்தனர். பின்னர், அவர்கள் அறை எடுப்பதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர். ஆனால் அங்கு பராமரிப்பாளர் சுரேஷ் ஜாட் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அவர்கள் வெளியேறினர் என்று துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) அம்ரிதா துஹான் கூறினார். பின்னர் இருவரும் பௌடா சௌராஹாவுக்குச் சென்றனர். அங்கு குற்றம் சாட்டப்பட்ட சமந்தர் சிங் பதி, தர்மபால் சிங் மற்றும் பட்டம் சிங் (வயது 20-22) ஆகிய மூவரும் அவர்களை அணுகினர் என்று அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமி மற்றும் அவரது காதலனுடன் நட்பாக பழகி, அவர்களுக்கு உணவு மற்றும் குளிர் பானங்களை வழங்கினார் என்று டிசிபி கூறினார். சிறுமியும் அவரது காதலரும் தங்களைப் பற்றி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கூறியபோது, மூவரும் அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தனர். அதிகாலை 4 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்வியு) பழைய வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாக துஹான் கூறினார். மைதானத்தை அடைந்த பிறகு, அவர்கள் சிறுவனை அடித்து, பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அதே நேரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
காலை வாக்கிங் செல்பவர்கள் அங்கு வர, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சிறுமியின் காதலன் காலை நடைபயிற்சி செய்பவர்களிடம் உதவியை நாடியுள்ளார். பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜோத்பூரின் ரத்தநாடா அருகே கணேஷ்புராவில் உள்ள ஒரு வீட்டில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்கள் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். அவர்களில் இருவர் தப்பிச் செல்ல முயன்றபோது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்றாவது ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக ஹோட்டல் பராமரிப்பாளரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ