- Home
- குற்றம்
- தொடக்கூடாத இடத்தில் தொட்டு தொல்லை கொடுத்த தோல் டாக்டர்! கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் இளம்பெண் அதிர்ச்சி
தொடக்கூடாத இடத்தில் தொட்டு தொல்லை கொடுத்த தோல் டாக்டர்! கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் இளம்பெண் அதிர்ச்சி
பெங்களூரில் தோல் அலர்ஜி சிகிச்சைக்கு வந்த 21 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தோல் நோய் மருத்துவர் பிரவீன் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக புகார் அளித்துள்ளார்.

பெங்களூர் அசோக் நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வருபவர் பிரவீன்(56). இவர் தோல் நோய் மருத்துவர். இந்நிலையில் 21 வயது இளம்பெண் தோல் அலற்சியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் இந்த தோல் அலற்சி அதிகரித்ததை அடுத்து அந்த இளம்பெண் கடந்த 17ம் தேதி பெற்றோருடன் செல்லாமல் கிளினிக்கிற்கு தனியாக வந்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண்ணை தனது அறைக்கு அழைத்த பிரவீன் சிறிது நேரத்தில் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஹோட்டலுக்கும் அழைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் அதிர்ச்சியில் அவரை தள்ளிவிட்டு வெளியே சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து இளம்பெண் பெங்களூர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தோல் அலற்சியால் நான் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அவர் என்னிடம் அரை மணிநேரம் பேசினார். பிறகு என்னை கட்டிப்பிடித்து கண்ட கண்ட இடங்களில் தொட்டார். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் மருத்துவ பரிசோதனை என்று சித்தரிக்க முயன்றார். சில முறை முத்தங்கள் கொடுத்தார். பரிசோதனை என்ற பெயரில் என் ஆடைகளை கழற்ற முயன்றார். நான் கடும் கோபமடைந்தேன். அப்போது எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஹோட்டலுக்கு வந்து ஆசையை நிறைவேற்றுங்கள் என்று தவறாக பேசினார். டாக்டர் பிரவீன் தன்னை 30 நிமிடங்கள் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரை அடுத்து டாக்டர் பிரவீன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக, டாக்டர் பிரவீன் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.