MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த நிவின் பாலி! அதிரடி வழக்கு பதிவு!

வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த நிவின் பாலி! அதிரடி வழக்கு பதிவு!

நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

2 Min read
Author : manimegalai a
Published : Sep 03 2024, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Police Complaint Against Nivin Pauly

Police Complaint Against Nivin Pauly

மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர் 6 பேர் சேர்ந்து, தனக்கு திரைப்படத்தில் ஏதேனும் கதாபாத்திரம் வாங்கி தருவதாக கூறி வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Hema Committee Statement

Hema Committee Statement

கேரள திரையுலகை தற்போது கொந்தளிக்கச் செய்துள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை. ஏற்கனவே மூத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், போன்ற பலரின் பெயர் ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து பல நடிகைகள், தானாக முன்வந்து சில முன்னணி நடிகர்களால், திரையுலகில் சந்தித்த மோசமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

35
Malayalam Industry sensation Issue

Malayalam Industry sensation Issue

குறிப்பாக மலையாள சினிமாவில் மிரட்டி படுக்க வைக்கும் கலாச்சாரம் இருப்பதாகவும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் வெளிப்படையாக சில சூப்பர் ஸ்டார் நடிகர்களை கூறி சாடி வருகின்றனர். இதனை உண்மையாகும் விதமாக மலையாள திரையுலகில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை உள்ளது பல நடிகைகள் ஓப்பனாக கூறினார். இந்த பிரச்சனை குறித்து பதில் அளிக்க வேண்டிய இடத்தில், இருந்த நடிகர் சங்க தலைவர் மோகன் லால்... திடீர் என தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து இவருக்கு கீழே இருந்த 17 செயலாளர்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்த்தனர். இதனால் எதையும் எதிர்த்து போராட தெரியாத கோழையாக மோகன் லான் உள்ளார் என்று நடிகை பார்வதி முதல் பலர் நேரடியாக விமர்சித்த நிலையில், பத்திரிகையாளர்கள் சிலர் தன்னை பற்றிய விஷயம் வெளியாகலாம் என பயந்து தான் மோகன் லால் பதவியை ராஜினாமா செய்தார் என கூறி வருகிறார்கள்.

ஹனி மூனுக்கு செல்லும் போது மகளையும் அழைத்து சென்ற சித்தி வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!

45
Young Complaint for Nivin pauly:

Young Complaint for Nivin pauly:

ஹேமா கமிட்டி அறிக்கை விஷயம் தற்போது, பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்... இளம் நடிகர் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது இளம் பெண் ஒருவர், திரைப்பட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். பல இளம் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நிவின் பாலி குறித்து மலையாள திரை உலகில் எழுந்துள்ள இந்த புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இளம் பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து, நிவின் பாலி மற்றும் அவருடைய நண்பர் ஆறு பேர் மீது எர்ணாகுளம் உன்னுக்கள் காவல் நிலையத்தில் போலீசார் 6 பேர் மீதும் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். எனவே கூடிய விரைவில் நிவின் பாலி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

55
Yezhu Kadal Yezhu Malai

Yezhu Kadal Yezhu Malai

நடிகர் நிவின் பாலி மலையாள நடிகராக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக இவர் தமிழில்  கடந்த 2013 ஆம் ஆண்டு 'நேரம்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடித்திருந்தார்.  இதைத்தொடர்ந்து பெங்களூர் டேஸ், பிரேமம் போன்ற படங்கள் மூலமாகவும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகராக மாறினார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved