பட வாய்ப்புக்கு படுக்கைக்கு பகிர சொன்ன பெரிய இயக்குனர்..! இளம் நடிகையின் பரபரப்பு புகார்..!
பிரபல இயக்குநர் மீது முன்னணி நடிகை ஒருவர் மீடூ புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து, திரைத்துறையில் பல இயக்குநர்கள், நடிகர்களின் தூக்கத்தை கெடுத்தது மீடூ விவகாரம். ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி மற்றும் இளம் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த திரைப்பிரபலங்கள் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டது.
படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டது குறித்தும், கட்டாயப்படுத்தப்பட்டது குறித்தும் பல நடிகைகள் தற்போது பொது வெளியில் தைரியமாக பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் இளம் நடிகை ஒருவர், தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இளம் இயக்குனர் பற்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் 'லைஃப் பார்ட்னர்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிராய்ச்சி தேசாய்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ' மிகவும் பிரபலமான ஒரு பெரிய இயக்குனர் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் பட வாய்ப்புக்காக என்னை படுக்கையை பகிர்ந்து கொள்ள கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி படுக்கையை பகிர்ந்து பெரிய படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என தான் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
குறைவான படங்களில் நடித்தாலும், மனதுக்கு நிறைவான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் பிராச்சி தேசாய்.
அதே நேரத்தில், இந்த இளம் நடிகையை... படுக்கைக்கு அழைத்த, அந்த பெரிய இயக்குனர் யார்? என்பதே பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.