- Home
- Cinema
- Yashika Aannand: பட வாய்ப்பு தேடிய போது.. படுக்கைக்கு அழைத்த இயக்குனர்! யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Yashika Aannand: பட வாய்ப்பு தேடிய போது.. படுக்கைக்கு அழைத்த இயக்குனர்! யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நடிகை யாஷிகா (Yashika) பட வாய்ப்பு தேடியபோது அவரிடம் சில இயக்குனர்கள், தவறான முறையில் நடக்க முயன்றது குறித்து அவர் ஏற்கனவே கூறிய பழைய தகவல் தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

திரையுலகிலும், அலுவலகங்களிலும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், நடிகைகள் பலர் #MeToo இயக்கம் மூலம் சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பகிர்ந்து கொண்டது கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.
அப்போது முன்னணி நடிகைகள் முதல், மூத்த நடிகைகள் என பலர் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த துஷ்பிரயோகம் குறித்தும் அதனால் எந்த அளவுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்டோம் என்பதையும் வெளிப்படையாக கூறினர்.
அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, யாஷிகா ஆனந்த், தான் காஸ்டிங் கவுச்சால் பாதிக்கப்பட்டது குறித்து தெரிவித்திருந்தார்.
இவர் பட வாய்ப்பு தேடிய போது, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இயக்கும் ஒரு படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ள சென்ற போது, அந்த இயக்குனர் யாஷிகாவிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இவர் பட வாய்ப்பு தேடிய போது, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ள சென்ற போது, அந்த இயக்குனர் யாஷிகாவிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் இந்த இயக்குனர் யார் என்பது குறித்து எந்த தகவலையும் யாஷிகா வெளியிடவில்லை, அதே போல் இன்னும் சில இயக்குனர்களும் தவறாக பேச்சு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது தனக்கு நடந்த விபத்தில் இருந்து மீண்டு, பழைய நிலைக்கு யாஷிகா திரும்பி வரும் நிலையில் இவர் குறித்த இந்த பழைய தகவல் மீண்டும் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.