- Home
- Cinema
- Samantha item song: ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. கட்டவுட் வைத்து, பாலபிஷேகம் செய்த மகளிர் அமைப்பு!
Samantha item song: ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. கட்டவுட் வைத்து, பாலபிஷேகம் செய்த மகளிர் அமைப்பு!
நடிகை சமந்தா (Samantha) முதல் முறையாக 'புஷ்பா' (Pushpa) படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட லிரிக்கல் வீடியோ வெளியான போது, சில ஆண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே... இதை தொடர்ந்து தற்போது இந்த பாடலுக்கு மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் கட்டவுட் வைத்து, பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் மட்டும் அல்ல ஐட்டம் சாங் வரை இறங்கி ஆட்டம் போட துவங்கி விட்டார்.
அந்த வகையில், இன்று தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ள 'புஷ்பா' படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்லிறியா மாமா... பாடலுக்கு படு ஹாட்டாக லோ நெக் ஜாக்கெட் மற்றும் குட்டை பாவாடை அணிந்து ஆட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த வாரம் வெளியான போது, 24 மணி நேரத்தில் சுமார் 14 மில்லியன் ரசிகர்களால் ரசிக்க பட்டு சமூக வலைத்தளத்தையே பரபரக்க வைத்தது.
மேலும் இந்த பாடலில் ஆண்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் உள்ளதாகவும், இந்த பாடலை தடை செய்யவேண்டும் என, ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் அமைப்பினர் போர் கொடி உயர்த்தினர். இதனால் 'புஷ்பா' படத்திற்கு புது பிரச்சனை வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல், புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு திரையரங்கே அதிர வைக்கும் அளவிற்கு, கை தட்டி பெண் ரசிகர்கள் பலர் இப்பாடலை வரவேற்றுள்ளனர்.
சமந்தாவிற்கு ஆண்கள் தரப்பில் இருந்தும் சில கட்டவுட் வைத்துள்ளது மட்டும் இன்றி, நேற்று ஆந்திர மாநிலம் அமராவதி தல்லூரு கிராமத்தில் உள்ள கோதண்டராமா கோவிலில் சமந்தா மற்றும் பாடலாசிரியர் பெயர்களில் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாலபிஷேகம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பெண்கள் தரப்பில் இருந்து, உண்மையைத்தானே பாடலில் சொல்லியிருக்காங்க என்பது போன்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகவே இந்த பாடலுக்கு மகளிர் அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.