MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி படத்தை இயக்குவதில் சுந்தர் சி-க்கு ஏற்பட்ட பிரச்சனை - தலைவர் 173 படத்தில் இருந்து விலகியது குறித்து ஓபன் டாக்!

ரஜினி படத்தை இயக்குவதில் சுந்தர் சி-க்கு ஏற்பட்ட பிரச்சனை - தலைவர் 173 படத்தில் இருந்து விலகியது குறித்து ஓபன் டாக்!

Why Sundar C Stepped Away from Rajinikanth 173: ரஜினிகாந்தை வைத்து 173-ஆவது படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து விலகியது குறித்து தற்போது கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2026, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சுந்தர் சி
Image Credit : Google

சுந்தர் சி

தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் மற்றும் ஹாரர் காமெடி போன்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படங்களை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் தான் இயக்குனர் சுந்தர் சி. 90களில் தொடங்கி இன்றுவரை பல தலைமுறை ரசிகர்கள் கூட ரசிக்கும்படியான பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார்.

27
அருணாச்சலம் திரைப்படம்:
Image Credit : Google

அருணாச்சலம் திரைப்படம்:

குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாமன், அருணாச்சலம், அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, கலகலப்பு, அரண்மனை சீரிஸ் போன்ற திரைப்படங்கள் வெறும் வணிக ரீதியாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் நினைவில் நீங்காத படங்களாகவும் உள்ளன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் ஒரு வருடம் வரை திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்தது.

37
சுந்தர் சி நடிகராகவும் தன்னை நிரூபிக்க முயன்றார்:
Image Credit : our own

சுந்தர் சி நடிகராகவும் தன்னை நிரூபிக்க முயன்றார்:

இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் சுந்தர் சி நடிகராகவும் தன்னை நிரூபிக்க முயன்றார். அந்த முயற்சியும் அவருக்கு ஒரு அளவிற்கு வெற்றி கிடைத்தது என்பதை மறுக்க முடியாது. பல காமெடி மற்றும் கமர்ஷியல் படங்களில் ஹீரோவாக நடித்த அவர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனாலும், அவரின் மெயின் பலம் இயக்கத்தில்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தற்போது, சுந்தர் சி மீண்டும் இயக்கத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

47
மூக்குத்தி அம்மன்:
Image Credit : Google

மூக்குத்தி அம்மன்:

குறிப்பாக, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமான மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான முதல் பாகம் வெற்றியடைந்ததால், அதன் தொடர்ச்சியான இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படம் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 173-ஆவது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

57
அண்ணாமலை திரைப்படத்தின் இரண்டாவது பாகமா?
Image Credit : Rajinikanth\Instagram

அண்ணாமலை திரைப்படத்தின் இரண்டாவது பாகமா?

இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த படம் அண்ணாமலை திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இந்த வாய்ப்பை சுந்தர் சி பயன்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்தனர். சிலர் இது தேதிகள் பிரச்சனை என்று கூறினார்கள்; இன்னும் சிலர் கதை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்றனர். இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், சமீபத்திய ஒரு பேட்டியில் சுந்தர் சி தானே இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

67
 ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு:
Image Credit : our own

ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு:

இதுகுறித்து சுந்தர் சி கூறும் போது, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ரஜினிகாந்த் சார் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில், அந்த வாய்ப்புடன் வந்த அழுத்தமும் மிக அதிகமாக இருந்தது. இதுவரை நான் இயக்கிய படங்கள் அனைத்தும் என் விருப்பப்படி எடுத்தவை. ஒரு கதை மக்களுக்கு பிடிக்கும் என்று தோன்றினால், அதை எந்த தயக்கமும் இல்லாமல் செய்துவிடுவேன்,” என்று கூறினார்.

77
விலக முடிவு
Image Credit : our own

விலக முடிவு

“ஆனால் இவ்வளவு பெரிய படத்தை இயக்கும்போது, ஒவ்வொரு முடிவையும் நான் மட்டும் எடுக்க முடியாது. பல எதிர்பார்ப்புகள் இருக்கும். பலரின் கருத்துகளும் முக்கியமாகிவிடும். அந்த சூழ்நிலையில், நான் முழுமையாக என்னாக இருந்து வேலை செய்ய முடியவில்லை. அந்த ப்ராஜெக்ட்டுக்கு நான் உண்மையாக இருக்க முடியாது என்று உணர்ந்தேன்,” எனவே அந்த படத்திலிருந்து விலக முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் எப்போதும் என்னால் நம்பிக்கையுடன் செய்ய முடியாத விஷயத்தை செய்ய விரும்பமாட்டேன். அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். முக்கியமாக, ரஜினிகாந்த் சாரிடம் நேரடியாக சொல்லிவிட்டு தான் நான் விலகினேன்,” என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா
குஷ்பூ
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்காக பிரபல ஹீரோயினுடன் சண்டைக்கு சீறிய த்ரிஷா - இந்த கதை தெரியாம போச்சே?
Recommended image2
வசூலில் தனுஷ் படத்தை தட்டிதூக்கிய நயன்தாராவின் ‘பேட்ரியாட்’ - முதல் நாளே இத்தனை கோடியா?
Recommended image3
Kara Movie Day 2 Box Office: கலெக்‌ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved