குக் வித் கோமாளி சீசன் 3 பைனலில் தொகுப்பாளர் ரக்சன் பங்கேற்காதது ஏன்? முதல் முறையாக அவரே கூறிய தகவல்!
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் பைனலின் போது, பங்கேற்காததன் ஏன்? என்பதற்கு தொகுப்பாளர் ரக்சன் முதல் முறையாக பதில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. தொடர்ந்து மூன்று சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், சமையல் கலைஞர்களான வெங்கடேஷ் பத் மற்றும் சமையல் கலைஞர் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
அதே போல், குக் வித் கோமாளி... நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார் தொகுப்பாளர் ரக்சன். சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின், மூன்றாவது சீசன் பைனல் நடந்தது. அதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆனால் முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்த ரக்சன் மட்டும் பங்கேற்கவில்லை.
மேலும் செய்திகள்: 'விருமன்' பட சக்ஸஸ் மீட்டில்... குட்டை உடையில் நடிகர் கார்த்தியுடன் கபடி விளையாடிய அதிதி ஷங்கர்! வீடியோ!
இது ஏன்? என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஏன் பங்கேற்கவில்லை என்பதை முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ரக்சன்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சி ஃபைனலின் போது தனக்கு அதீத காச்சல் இருந்ததாகவும், அது கொரோனா தொற்றாக இருக்குமோ என்கிற அச்சத்தாலும், சில தனிப்பட்ட காரணங்களாலும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: முதல் முறையாக ஐ மேக்சில் வெளியாகும் தமிழ் படம் 'பொன்னியின் செல்வன்'..!
கொரோனா பரிசோதனையில், தனக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக நடந்த 'குக் வித் கோமாளி சீசன் 3' பைனலில் ஸ்ருதிகா அர்ஜுன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தர்ஷனும், மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் பெற்றனர். இதன் பின்னர் இனிதே இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கலகலப்பாக நடத்த முடியுமா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது 'குக் கோமாளி சீசன் 3 ' நிகழ்ச்சி. 3 சீசன் முடிவடைந்துவிட்ட நிலையில், நான்காவது சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள், இப்போதே தங்களுடைய எதிர்பார்ப்பை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: வெற்றிகரமாக 75 நாட்களை நிறைவு செய்த விக்ரம்..! இதுவரை வசூல் செய்தது மட்டும் எத்தனை கோடி தெரியுமா?