MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தூக்கத்திலேயே பிரிந்த மனோஜ் உயிர்; அன்று நடந்தது இது தான்! இளையராஜா செய்த உதவி என்ன?

தூக்கத்திலேயே பிரிந்த மனோஜ் உயிர்; அன்று நடந்தது இது தான்! இளையராஜா செய்த உதவி என்ன?

உண்மையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிக்கையாளர் விகே சுந்தர் வெளிப்படையாக பேசியுள்ள தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Apr 02 2025, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

மனோஜின் கதாபாத்திரங்கள் பேசப்படாமல் போனது:

'தாஜ்மஹால்' படம் மூலமாக திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் இந்த படத்தை தொடர்ந்து, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், சாதூரியன், அன்னக்கொடி என்று 10-க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். ஆனால், எந்தப் படத்திலும் இவரது கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் போனது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

சூரியை வைத்து அடுத்த படம் பிளான் பண்ணிய மனோஜ்:

இதனால் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 2023-ஆம் ஆண்டு வெளியான 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படமும் பெரியளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. அப்பா பாரதி ராஜா போல் ஒரு இயக்குனராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என ஆசை பட்ட மனோஜ், அதற்காக கதைகளும் தயாராகவே வைத்திருந்தார். சூரியை வைத்து அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக நடிகர் சூரியே சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூறினார்.

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த இளையராஜா!
 

38
Manoj Bharathiraja

Manoj Bharathiraja

அஞ்சலி செலுத்தாத பிரபலங்கள்:

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனோஜ் பாரதிராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் அஜித், ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோர் மனோஜ் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு ஆறுதலும் கூட அவர்கள் கூறவில்லை என்பது பலரின் ஆதங்கமாகவும் இருந்தது.

48

மனோஜ் கிரியேஷன்:

இந்த நிலையில் தான் மனோஜின் கடைசி நிமிடங்கள் குறித்து, பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "மனோஜ் பிறந்த பிறகு தான் பாரதிராஜாவிற்கு பேரும், புகழும் கிடைத்தது. படங்களும் ஹிட் கொடுக்க ஆரம்பித்தது. பட வாய்ப்புகளும் குவிந்தது. இவ்வளவு ஏன் மனோஜ் கிரியேஷனில் தயாரிக்கப்பட்ட எல்லா படங்களும் ஹிட் கொடுத்தன. இந்த நிலையில் தான் பாரதிராஜா மற்றும் மனோஜ் இருவரும் தங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்று தனித்தனியாக பிரிந்து வந்தார்கள். 

மனோஜ் பாரதிராஜா பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்; அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில்!
 

58

நிதி பற்றாக்குறை:

நடிகராக இருக்கும் போது மனோஜ் தன்னுடன் 'சாதூரியன்' படத்தில் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனோஜ் நடித்த படங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அதனால், மனோஜின் திருமணத்திற்கு பிறகு அவருக்கான செலவுகளை எல்லாம் பாரதிராஜா தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். மேலும், மார்கழி திங்கள் படத்தை இயக்கிய போதும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் கூட பாரதிராஜா தான் மறைமுகமாக உதவி செய்திருக்கிறார்.

68

மனோஜ் மற்றும் பாரதிராஜா இடையில் கருத்து வேறுபாடு:

படம் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸூக்கு தயாரான நிலையில் நிதி சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியின்றி மனோஜின் அம்மா தான் தனது நகைகளை கொடுத்து உதவி செய்திருக்கிறார். நகைகளை அடமானம் வைத்து தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இப்படி தனது மகனுக்காக பாரதிராஜா மட்டுமின்றி மனோஜின் அம்மாவும் உதவி செய்திருக்கிறார். இப்படியிருக்கும் போது மனோஜ் மற்றும் பாரதிராஜா இடையில் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. அதனால், தான் இருவரும் தனித்தனியாக வந்துவிட்டார்கள் என்று பலரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் துளி கூட உண்மையில்லை. 

விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தை மிஸ் பண்ணிய மனோஜ் பாரதிராஜா! எந்த படம் தெரியுமா?

78

மனோஜ் உயிரிழந்த அன்று நடந்தது என்ன?

மனோஜ் தனது உடலை பாதுகாக்கவில்லை. அவருக்கு இளம் வயதில் இருந்தே சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. மேலும், கடந்த  சில வருடங்களாக அவர் நிறைய ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதுதான் அவருக்கு இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. 

மனோஜ் உயிரிழந்த நாளன்று பிற்பகல் சாப்பிட்டு விட்டு தூங்கியிருக்கிறார். அவர் எப்போதும் சாப்பிட்ட பின்  தூங்குவது வழக்கம். ஆனால், அன்று அவர் தூங்கி எழவில்லை. அப்போது தான் அவர் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இதை மனோஜின் உறவினர் தான் என்னிடம் கூறினார். இயக்குநராக மனோஜ் ஆசைப்படும் போது, அதெல்லாம் வேண்டாம் என்று பாரதிராஜா மறுத்திருக்கிறார். அதற்கு காரணம், தான் பட்ட கஷ்டத்தை தனது மகனும் படக் கூடாது என்பதற்கு தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். இது முக்கிய முழுக்க அவர் அவர் மனோஜ் மீது வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடு மட்டுமே தவிர, அவரின் ஆசையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

88

இளையராஜா செய்த உதவி:

அதே போல் நந்தனா மற்றும் மனோஜ் திருமணத்தை நடக்க முக்கிய காரணம் இளையராஜா தான். மனோஜ் மற்றும் நந்தனா திருமணத்திற்கு பாரதி ராஜா மகனுக்காக சம்மதம் கூறினாலும், நந்தனா வீட்டில் சம்மதம் சொல்லவில்லை. அப்போது இளையராஜா தான் மனோஜ் மிகவும் நல்ல பையன் என கூறி வீட்டிலும் சொல்லி சம்மதிக்க வாங்கி கொடுத்து உதவி இருக்கிறார். 2 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மனோஜ் - நந்தனா காதலின் அடையாளமாக அவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் மதிவதனி தற்போது திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இளயமகள் அர்த்திகா கல்லூரியில் படித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

பார்த்த நொடியே நந்தனா மீது காதலில் விழுந்த மனோஜ்; நெஞ்சை தொடும் லவ் ஸ்டோரி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மனோஜ் பாரதிராஜா காலமானார்
மனோஜ் பாரதிராஜா திரைப்படங்கள்
பாரதியார்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved