MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்! எந்த படத்தில் தெரியுமா?

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்! எந்த படத்தில் தெரியுமா?

Vijay Wanted a Villain Role in Ajith Superhit Movie: அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில், வில்லனாக நடிக்க விஜய் ஆசைப்பட்ட தகவலை அந்த படத்தின் இயக்குனரே தற்போது பகிர்ந்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2026, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அஜித் குமார் மற்றும் தளபதி விஜய்:
Image Credit : @ajithFC

அஜித் குமார் மற்றும் தளபதி விஜய்:

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமாக அமர்ந்து ஆட்சி செய்து வரும் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் என்றால் அது அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் தான். இவர்கள் இருவருக்குமே உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதும், திரையரங்குகளில் ஒரு திருவிழா போல காட்சியளிக்கும். குறிப்பாக, ஒரே சமயத்தில் இவர்களின் படங்கள் வெளியானால், அது ரசிகர்களுக்கும் போட்டி உணர்வை ஏற்படுத்தி இவர்களை போட்டி நடிகர்களாக மாற்றுகிறது.

26
 சிறந்த நண்பர்கள்:
Image Credit : @ajithFC

சிறந்த நண்பர்கள்:

திரையில் இவர்கள் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். இதற்கான சான்றாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. ஒரு அரசியல் பிரச்சார நிகழ்வின் போது, தொண்டர்கள் விஜய்க்கு அஜித் குமார் உடன் இணைந்து இருந்த புகைப்படத்தை கொடுத்தபோது, அதை அவர் கவனமாக பெற்றுக்கொண்டு பாதுகாத்து வைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல் தேர்தலில் வாக்களிக்கும் போது, விசில் சின்னம் குறித்து தேர்தல் பணியாளர்களிடம் கேட்டறிந்ததாக கூறப்பட்டது.

36
வெங்கட் பிரபு:
Image Credit : Google

வெங்கட் பிரபு:

இந்நிலையில், இன்னொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. விஜய், அஜித் குமார் நடித்த ஒரு முக்கியமான படத்தில் தானும் நடித்திருக்கலாமே என்ற ஆசையை வெளிப்படுத்தியதாக இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசும்போது, ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியான பிறகு, விஜய் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

46
நான் கண்டிப்பாக நடித்திருப்பேன்:
Image Credit : our own

நான் கண்டிப்பாக நடித்திருப்பேன்:

அந்த படத்தின் வெற்றியைப் பற்றி பேசும்போது, “அந்த படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் என்னை அழைத்திருந்தால், நான் கண்டிப்பாக நடித்திருப்பேன். அது இன்னும் பெரிய அளவில் இருந்திருக்கும்,” என்று கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மேலும், “நீங்கள் முன்பே சொன்னிருந்தால் நான் முயற்சி செய்திருப்பேன்” என்று விஜய் கூறியதும், அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், நல்ல கதைகள் மற்றும் வித்தியாசமான வாய்ப்புகள் வந்தால் அதை ஏற்க தயங்காத மனநிலையைக் காட்டுகிறது.

56
 அஜித் குமாரின் 50வது படம் :
Image Credit : our own

அஜித் குமாரின் 50வது படம் :

அதே நேரத்தில், விஜய் தனது நண்பர்களுக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்குவார் என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பிரேம்ஜியை அழைத்து, “நான் உன் அண்ணனுடன் படம் செய்தால், நீ என்னுடன் நடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக படத்திற்கு இசையமைக்க வேண்டும்” என கூறியதாக பேசியுள்ளார்.

மங்காத்தா திரைப்படம் 2011ஆம் ஆண்டு அஜித் குமாரின் 50வது படமாக மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதில் வில்லனாக அர்ஜுன், திரிஷா, லக்ஷ்மி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

66
 கல்ட் கிளாசிக் ஹிட்:
Image Credit : Google

கல்ட் கிளாசிக் ஹிட்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரது இசை, குறிப்பாக படத்தின் தீம் மியூசிக், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்றுவரை மங்காத்தா திரைப்படம் ரசிகர்களின் ஃபேவரிட் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. ரீ-ரிலீஸின் போதும் இந்த படம் நல்ல வசூல் சாதனை படைத்து, அதன் பிரபலத்தை மீண்டும் நிரூபித்தது. மொத்தத்தில், இந்த படம் ஒரு சாதாரண கமர்ஷியல் ஹிட் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!
Recommended image2
வசூல் வேட்டையில் பாகுபலியை வீழ்த்திய துரந்தர் 2.. எவ்வளவு வசூல் தெரியுமா?
Recommended image3
ரஜினி படத்தை இயக்குவதில் சுந்தர் சி-க்கு ஏற்பட்ட பிரச்சனை - தலைவர் 173 படத்தில் இருந்து விலகியது குறித்து ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved